செட்டிநாடு பால்பணியாரம்
பால்பணியாரம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். செட்டிநாடு சமையலில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த பால் பணியாரம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த பால்பணியாரம் செய்வது எப்படி என்று தெரிவதில்லை.
ஆகவே இந்த பதிவை பார்த்து பால்பணியாரம் எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்-1
எண்ணெய்- தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
பால் பணியாரம் செய்முறை:
முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு புள்ளி உப்பு தூவவும். தேங்காயை துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் -யை ஊற்றி நன்கு காய்ந்ததும் உருண்டை உருண்டையாக பிடித்து போடவும். அது பொன்னிறமாக வரும்போது எடுத்துக் கொள்ளவும். பின்பு நன்கு ஆறிய பின் எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலில் ஊறவைத்து பிறகு சாப்பிடவும்.
சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி..
மேலும் பல சுவையான சமையல் செய்முறைகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்