Uber Auto
இப்பொழுது உள்ள ஸ்மார்ட் உலகத்தில் சாப்பிடுவதிலிருந்து, பயணம் செய்வது, பணம் கட்டுவது, சினிமா டிக்கெட் புக் செய்வது என்று எல்லாவற்றிற்குமே ஆன்லைன்தான்.
அந்த வரிசையில் நாம் முன்பே ola ஆட்டோ, rapido பைக் இவையெல்லாம் எப்படி புக் செய்து பயணிப்பது என்று பார்த்துள்ளோம்.
இந்த பதிவில் Uber நிறுவனத்தில் எப்படி ஆட்டோ மற்றும் கார் புக் செய்து பயணம் செய்வது என்று பார்க்கலாம்.
உபேர் ஆட்டோ
Uber App க்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
Uber App Registration
Uber App – ஐ இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் லொகேஷன் ஆன் செய்து பின்னர் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அதை சரி பார்த்த பின் உங்களுது பெயரை டைப் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் இருக்கின்ற இடத்தின் சரியான லொகேஷனை தேர்வு செய்யும். WERE GO என்ற ஒரு ஆப்சன் கேட்கும்.
இது அப்படியே இருக்கட்டும். நாம் இந்த APP -ஐ பற்றி பார்த்து விட்டு பிறகு எப்படி ஆட்டோ புக் செய்வது என்று பார்க்கலாம்.
இந்த app செட்டிங்ஸ் -ல் Home, Add Work போன்ற வசதிகள் இருக்கும்.அதில் உங்கள் வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் உள்ள லொகேஷன்களை செய்து கொள்ளுங்கள்.
அடிக்கடி நாம் பயணம் செய்யும்போது இந்த ஹோம் மற்றும் ஒர்க் ஆப்ஷன்களை எளிதாக கிளிக் செய்து பயணத்திற்காக Uber cab book செய்து கொள்ளலாம்.
உபேர் ஆட்டோ புக் செய்யும் முறை
அடுத்ததாக Enter pickup point என்பதில் நீங்கள் இருக்கும் இடம் தானாகவே தேர்வு செய்யப்பட்டிருக்கும்.அடுத்து where to என்பதை கிளிக் செய்து நீங்கள் எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்தை டைப் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை அந்த இடங்களை நீங்கள் ஏற்கனவே சேவ் செய்து வைத்திருக்கிறீர்கள் என்றால் எந்த இடமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
கீழே பார்த்தீர்களென்றால் உங்கள் ஊரில் உபர் ஆட்டோ மட்டுமே இருந்தால் உங்களின் பயணத்திற்கான உத்தேச தொகை விடும்.
ஒருவேளை உங்கள் ஊரில் ஆட்டோ, கார் இவை அனைத்தும் உபர் நிறுவனத்திலிருந்து வாடகைக்கு கிடைக்கும் என்றால் கீழே popular, economy, more என்று மூன்று வகைகளில் நமக்கு வாகனங்கள் புக் செய்வதற்கான ஆப்ஷன்கள் இருக்கும்.
இதில் இந்த popular என்பது ஆட்டோ புக் செய்வதற்கான ஆப்ஷன் ஆகும். economy என்பது சிறிய கார்களை வாடகைக்கு புக் செய்வதற்கான ஆப்ஷன் ஆகும்.
more என்ற ஆப்ஷனில் அதிக நபர்கள் செல்லக்கூடிய கார்களை புக் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். எனவே உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு ஆட்டோ புக் செய்ய வேண்டுமென்றால் கீழே ஆட்டோவை தேர்வு செய்துவிட்டு பிறகு confirm Uber auto என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மறுபடியும் உங்களை எந்த இடத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமோ அந்த பிக்கப் லொகேஷன் வரும்.
அது சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் confirm pickup என்பதை அழுத்துங்கள்.
பின்னர் ஒரு சில நகரங்களில் நீங்கள் எந்த வகையில் பணம் செலுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஆப்ஷன் வரும். ஒரு சில நகரங்களில் இந்த ஆப்ஷன் வருவதில்லை.
ஆக மறுபடியும் confirm என்பதை அழுத்தினால், உங்களது புக்கிங் உறுதிசெய்யப்பட்டு உங்களுக்கான ஆட்டோவின் பதிவு எண் மற்றும் ஓட்டுனரின் பெயர், ஓட்டுனரின் மொபைல் எண் போன்ற விவரங்கள் வந்துவிடும்.
அதை வைத்து நீங்கள் அவரை தொடர்பு கொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை பரிமாறிக் கொள்ளலாம்.
செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் உங்களுக்கான தொகை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். அந்தத் தொகையை மட்டும் நீங்கள் ஓட்டுனரிடம் கொடுத்தால் போதும்.
குறிப்பு
மேலும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த செட்டிங்ஸ் ஆப்ஷனில் manage trusted contacts என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்து உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களை பதிவு செய்து வைத்து நாம் செல்லும் இடங்களை லைவ்வாக ஷேர் செய்யலாம். எனவே இந்த செட்டிங்ஸ் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் இந்தப் பதிவு பயன்படவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.