Contents
VPN
மொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி?
உங்கள் மொபைலின் செட்டிங்சை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் MORE என்பதை கிளிக் செய்து WIRELESS AND NETWORKS பிரிவுக்கு வந்து கொள்ளுங்கள்.
இந்த முறை ஒவ்வொரு மொபைலுக்கும் மாறுபடும். நீங்கள் வரவேண்டியது இந்த VPN ஆப்ஷன் இருக்கும் பக்கத்திற்கு.
இங்கே VPN -ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் பக்கத்தில் + என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Edit Vpn Profile என்ற ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Name என்பதில் ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து கொள்ளுங்கள். அடுத்து Type என்பதில் PPTP என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அதற்கு கீழே Server Address என்பதில் நாம் முன்பு பார்த்த வெப்சைட்டில் சென்று ஏதாவது ஒரு சர்வரை Copy செய்து இங்கே Paste செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு இங்கே மொபைலில் கேட்கப்படும் User Name, password -ல் அதே வெப்சைட்டில் இருக்கும் User Name, password -ஐ பார்த்து டைப் செய்யுங்கள்.
டைப் செய்த பின்னர் கீழே Save என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்க கொடுத்த பெயரில் உள்ள Vpn Profile -ஐ கிளிக் செய்து Connect செய்தால் இலவசமாக, அன்லிமிட்டாக VPN பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.