முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் cm health insurance card download
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்றும், அதில் உள்ள உறுப்பினர்களின் விவரம் மற்றும் அதற்கான காப்பீட்டு அட்டையை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஒருவேளை உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இல்லை என்றால் புதிதாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். எனவே இந்த பதிவு உங்களில் தெரிந்த யாருக்காவது பயன்படும் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து அவர்களுக்கு ஷேர் செய்யவும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் இருக்கிறதா என்பதை அறிய என்ன தேவை?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிய உங்களது ரேஷன் கார்டு எண், அதாவது ஸ்மார்ட் கார்டுக்கு முன்பு இருந்த ரேஷன் கார்டு எண் தேவை.
அல்லது நீங்கள் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய செய்திருந்த மொபைல் எண் வைத்தும் உங்களது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
https://claim.cmchistn.com/Payer/PayerMembersearch.aspx
எவ்வாறு காணலாம்?
இந்த பக்கத்தில் மூன்று வழிகளை பயன்படுத்தி உங்களது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -ற்கான காப்பீட்டு அட்டையை நீங்கள் காணலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் -ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
நீங்கள் புதிதாக விண்ணப்பித்திருந்தால் அதற்கான URN எண்
இதில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் நீங்கள் உள்ளீடு செய்து கீழே உள்ள SEARCH என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் இருந்தால் கீழே அதன் விவரங்கள் வந்துவிடும்.
ஒருவேளை உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் இல்லை என்றால், எந்த தகவல்களும் வராது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -ற்கான அட்டை டவுன்லோடு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இதற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோடு செய்வதற்கு POLICY NO என்பதற்கு கீழே உள்ள எண்ணை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதற்கான உங்களின் முழு விவரம் மற்றும் இதில் இணைந்திருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரம் ஆகிய அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோடு செய்ய இந்த இடத்தில் உள்ள Generate e-card என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது இதை டவுன்லோடு செய்து கொண்டு உங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
ஒருவேளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இல்லை என்றால் எவ்வாறு இதில் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வது என்பதை பார்க்கலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் வழிமுறை
கிராம நிர்வாக அலுவலரிடம் குடும்ப வருமானச் சான்றிதழை பெற வேண்டும்.
குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் மற்றும் வருமானச் சான்றிதழ் உடன் மாவட்ட கியோஸ்க்கு வர வேண்டும்.
ஆப்ரேட்டர் மேற்கண்ட ஆவணங்களை சரி பார்ப்பார். அடிப்படை விவரங்கள் மற்றும் கைரேகை பதிவு செய்த பிறகு, அவர் உங்கள் பெயரை திட்டத்தில் பதிவு செய்வார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை எடுத்த பின் பயனாளிக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
Angel One Account Opening Tamil – How to Opening Demat account online – Step by Step Guide to open account in Angel one – இரண்டே நிமிடத்தில் ஏஞ்சல் ஒன் -ல் கணக்கு தொடங்கலாம்
இரண்டே நிமிடத்தில் Angel One -ல் Demat கணக்கு தொடங்க முதலில் என்னென்ன தேவை என்பதை முன்பே தயாராக வைத்துக்கொண்டு, பின்னர் ஆன்லைனில் கணக்கு தொடங்க ஆரம்பித்தல் மிக எளிதாக தொடங்கலாம்.
PF முழுத்தொகையையும் எடுக்கும்போது சமர்பிக்க வேண்டிய 15G படிவம்
ஒரு ஊழியர் (தனிநபர்) 5 வருடங்களுக்குள் பணிபுரிந்து அவரது PF தொகையில் 50000 -க்கு மேல் திரும்ப பெற விண்ணப்பிக்கும்போது TDS விலக்கு அளிக்க Form 15G/15H (படிவம் 15G/15H) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
Tamilnadu RTE Application 2022-23 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி தேவையான ஆவணங்கள்
Tamilnadu RTE Application 2022-23 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைத்து குழந்தைகளும் நல்ல தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் நமது நாட்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஒரு நாட்டின் உண்மையான நல்ல முன்னேற்றத்தை, முறையான தகுதியான கல்வியை அனைவரும் பெற்றால் மட்டுமே அடைய முடியும். நல்ல கல்வியை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே பெற முடியும் என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இந்த வாய்ப்பை அரசு நமக்கு அளித்து வருகிறது. எனவே அதை தகுதியான நபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2022-23 கல்வியாண்டிற்கான RTE Tamilnadu Application 2022-23 வருகிற 20 ஏப்ரல் 2022 அன்றிலிருந்து ஆன்லைனில் நாம் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
2022-23 கல்வியாண்டிற்கான RTE Tamilnadu Application 2022-23 வருகிற 18 மே 2022 அன்று ஆன்லைன் விண்ணப்பம் முடிவடைகிறது. எனவே இந்தத் தேதிக்குள் தகுதியான நபர்கள் www.rte.tnschools.gov.in என்ற லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Tamilnadu RTE Application 2022-23 இந்த கல்வி ஆண்டில் விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு
தமிழ்நாடு RTE Application 2022-23 -ல் விண்ணப்பிக்க வேண்டிய குழந்தைகள் 31-07-2018 லிருந்து 31-07-2019 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த 2022-23 கல்வி ஆண்டிற்கான RTE Tamilnadu Application -ல் விண்ணப்பிப்பதற்கு தகுதியான வயதுவரம்பு உள்ளவர்கள்.
Tamilnadu RTE Application 2022-23 ஆன்லைனில் நாம் விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
Experience certificate download pdf │ அனுபவம் கடிதம் மாதிரி விண்ணப்பம் டவுன்லோடு
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நாம் வேலைக்காக மாறும்போது ஏற்கனவே நாம் வேலை செய்த நிறுவனத்தில் நாம் எவ்வாறு பணி செய்திருக்கிறோம், எத்தனை ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோம், எவ்வளவு சம்பளம் வாங்கி வந்தோம் போன்ற அனைத்து தகவல்களையும் மற்றொரு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த Experience certificate download அனுபவம் கடிதம் தேவைப்படும்.
கீழே உள்ள இந்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பழைய நிறுவனத்தின் முதலாளி அல்லது அதிகாரி போன்றோர் மூலியமாக இந்த விண்ணப்பத்தை நிரப்பி நாம் புதியாதாக எந்த நிறுவனத்தில் சேர போகிறோமோ அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்துடன் இணைத்து கொடுக்கலாம்.
Experience certificate download pdf │ அனுபவம் கடிதம் மாதிரி விண்ணப்பம் டவுன்லோடு
அரசு விடுதியில் சேர்த்து கொள்ளப்படுவதற்கான விண்ணப்பம் டவுன்லோடு │ பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் │ Government Hostel Admission – Application Form
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
அதில் கேட்கப்படும் விவரங்களை முறையாக பூர்த்தி செய்து அறிவிக்கப்படும் நாட்களுக்குள் சமர்ப்பியுங்கள்.
அரசு விடுதியில் சேர்த்து கொள்ளப்படுவதற்கான விண்ணப்பம் டவுன்லோடு │ Government Hostel Admission – Application Form