என்னதான் நான் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக whatsapp பயன்படுத்தி வந்தாலும் அதில் நமக்கு வருவது ஃபார்வர்டு மெசேஜ்கள் தான். அதே போல நாம் பிறருக்கு அனுப்புவதும் அதே பார்வேர்ட் மெசேஜ் தான்.
அப்படியே தப்பித்தவறி ஒரு சில நண்பர்களும் உறவினர்களும் ஹாய், ஹலோ, குட் மார்னிங், குட் நைட் இந்த மாதிரி மெசேஜ் செய்தாலும் நாம் பதிலுக்கு ரிப்ளை செய்வதற்கு நேரம் இருப்பதில்லை.
அல்லது அந்த மெசேஜ்களை சில நாட்கள் கழித்துதான் பார்க்கவே செய்கிறோம். இந்த மாதிரி ஹாய், ஹலோ, குட் மார்னிங், குட் நைட் போன்ற மெசேஜ்களுக்காவது ஆட்டோமேட்டிக்காகவே ரிப்ளை போனால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு.
அந்த மாதிரி ஒரு அப்ளிகேஷனை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த அப்ளிகேஷனின் பெயர் Auto Responder for whatsapp.
இந்த அப்ளிகேஷனில் எந்த மெசேஜ்-க்கு என்ன பதில் அனுப்ப வேண்டுமென்று நாம் முன்கூட்டியே Save செய்து வைத்துக் கொள்ள முடியும்.
பின்னர் நமக்கு வரும் மெசேஜ் களுக்கு ஆட்டோமேட்டிக் ஆகவே நாம் சேவ் செய்து வைத்திருக்கும் மெசேஜ்களை இந்த அப்ளிகேஷன் அனுப்பிவிடும்.
நமக்கு இந்த மாதிரி மெசேஜ் களுக்கு பதில் அனுப்ப நேரமில்லாவிட்டாலும், இந்த அப்ளிகேஷன் நமக்கு வரும் இந்த மாதிரி மெசேஜ் களுக்கு ரிப்ளை செய்து விடுவதால் நமக்கு மெசேஜ் செய்பவர்களுக்கு நாம் respond செய்கிறோம் என்ற எண்ணமாவது இருக்கும்.
Auto Responder For whatsapp
இந்த அப்ளிகேஷனை ஒபன் செய்து Permissons Allow கொடுத்துவிடுங்கள். பிறகு கீழே உள்ள + Symbol கிளிக் செய்து Sould Be answered என்ற இடத்தில் எந்த மெசேஜ் என்பதை டைப் செய்து ஓகே கொடுங்கள்.
அதில் Similarity Match என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்து Should Be Send என்ற இடத்தில் என்ன பதில் அனுப்ப வேண்டுமென்று சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு சேவ் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆட்டோமேட்டிக்காக பதில் செல்லும்.
App Link
[wp_ad_camp_3]
இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். நன்றி.