வெள்ளரிக்காய் ஆசிட்டுக்கு இணையானதா? அய்யோ!

0
2850
வெள்ளரிக்கா மருத்துவ பயன்கள் DO SOMETHING NEW

Contents

வெள்ளரிக்காய்

எவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், நன்மைகளை கொடுத்தாலும் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைத்தால் நாம் அதை கண்டுகொள்வதில்லை.

அந்த வரிசையில் கொய்யா, பாப்பாளி,தர்பூசணி இவற்றை தொடர்ந்து வெள்ளரிக்காயும் அடங்கும். ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கு எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னிடத்தில் தக்கவைத்துள்ளது இந்த வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காயின் முக்கிய நன்மைகள்

  • வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம். அதனால் உடல் சூடு சம்பந்தமாக வரும் அனைத்து நோய்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.
  • அதிக டென்சன் வேலைப்பளு காரணமாக தலையில் ஏற்படும் சூட்டை தணிக்க வல்லது நாம் தினம் சாப்பிடும் ஒரு வெள்ளரிக்காய்.
  • பற்கள் மற்றும் ஈறுகளில் கிருமி தொற்றுகளினால் ஏற்படும் ஈறு வீக்கம், நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு பல் மருத்துவரே இந்த வெள்ளரிதான்.
  • ஒரு வெள்ளரியை மெதுவாக நன்கு மென்று பசை போல் வாயினுள் அரைக்க வேண்டும். தினம் இதை செய்து வர வாயினுள் உள்ள கிருமிகள் இந்த வெள்ளரியால் அழிக்கப்படும்.
  • அடுத்து அனைவரும் அறிந்த ஒன்றுதான் கண்களின் கரு வளையத்திற்கு வெள்ளரியை நறுக்கி கண்களை மூடி அதன்மேல் வைத்து ஓய்வெடுக்க கருவையங்கள் காணாமல் போகும். இது எதனாலென்றல் இதிலுள்ள ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் சிலிக்கா இரண்டும் இணைந்து கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களை போக்குகிறது.
  • அடுத்து அனேக மக்கள் எதிர்பார்க்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை இதிலுள்ள நீர்ச்சதுக்கு உண்டு.
  • தினம் ஒரு வெள்ளரியை சாப்பிட்டு வந்தாலே அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளிலுள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் மேலும் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

வெள்ளரிக்காய் ஆசிட்டுக்கு சமம்

வெள்ளரிக்கா மருத்துவ பயன்கள் DO SOMETHING NEW

ஏன் இப்படி தலைப்பு வைத்தோம் என்றால் உண்மையில் வெள்ளரியின் நீர்சத்து ஒரு ஆசிட் தான். எதற்கென்றால் சிகரெட் நிகோடின் நஞ்சிற்கு. ஆம் இந்த நிகோடின் நஞ்சிற்கு ஒரு சிறந்த மருந்து இந்த வெள்ளரிதான். 

புகை பிடிப்பதால் நம் இரத்த நாளங்களில் படியும் நிகோடின் படிவுகளினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து உறுப்புகளின் செயல்திறனும் குறைந்து வாழ்நாளும் குறைகிறது. இது அனைவரும் அறிந்ததே.

ஒரு கழிப்பறையை ஆசிட் ஊற்றி நன்கு தேய்த்து கழுவினால் அதிலுள்ள அழுக்குகள் எப்படி கரைந்து ஓடுமோ, அதே மாதிரி நாம் சாப்பிடும் வெள்ளரி புகை பிடிப்போரின் இரத்த நாளங்களிலுள்ள நிகோடின் பதிவுகளை கழுவி சுத்தம் செய்கிறது.

இதனால்தான் வெள்ளரியை ஆசிட்டிற்கு இணையானது என்றோம்.

 

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.