UAN Number
Uan நம்பர் என்பது நமது வருங்கால வைப்பு நிதி கணக்கு Pf account -ற்காக நமக்கு கொடுக்கப்படும் 12 இலக்க எண்ணாகும். இதை நாம் பணிபுரியும் நிறுவனத்திலேயே கேட்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் Pf Account -உடன் இணைத்திருக்கும் மொபைல் எண்ணிற்கு மாதாமாதம் நமது Pf Account -ல் பணம் சேர்ந்ததும் நமக்கு SMS வரும்போதும் இந்த UAN எண் வரும். அந்த UAN NUMBER ACTIVATE எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
UAN Number Activate
இந்த UAN நம்பரை ஆக்டிவேட் செய்தால் நாம் Pf Account – ற்கான பல நன்மைகளை ஆன்லைன் வாயிலாக அனுபவிக்க முடியும். என்னென்ன பலன்கள்?
- நமது PF Account – ல் எவ்வளவு தொகை சேர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
- நமது பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் செய்து கொள்ளலாம்.
- ஆதார், PAN, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவைகளை நமது PF Account Uan Number உடன் ஆன்லைனிலேயே இணைத்துக்கொள்ளலாம்.
- நமது Pf account Uan Number – க்கான அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Uan Number Activate – செய்யும் முறை
உங்கள் Uan Number ஆக்டிவேட் இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வாருங்கள். இதில் கேட்கப்படும் உங்களின் விவரங்களை டைப் செய்யுங்கள். இங்கே PF Account உடன் லிங்க் செய்திருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
பின் Get Authentic pin என்பதை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வேர்டு வரும்.
Pf Account – ற்குள் Login செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
பின்னர் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்தில் வந்து உங்கள் Uan எண் மற்றும் உங்கள் மொபைலிற்கு வந்த பாஸ்வேர்டு ஆகியவற்றை டைப் செய்து Log in செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த பக்கத்தில் ACCOUNT என்பதை கிளிக் செய்து அதில் CHANGE PASSWORD என்பதை கிளிக் செய்து உங்களுக்கு நினைவில் இருக்கின்ற மாதிரி புதிய பாஸ்வேர்டு உருவாக்கி கொள்ளுங்கள்.
இனிமேல் நீங்கள் இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான சேவைகளை நீங்களே ஆன்லைனிலேயே பெறலாம்.
மேலும் இந்த பதிவு பற்றிய வீடியோ
PF பற்றிய மேலும் சில வீடியோக்களுக்கு
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் அனைவருக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் Share செய்யுங்கள். நன்றி.