சாதரணமாக இன்றைய கால கட்டத்தில் ஒரு வேலைக்கு சென்றால் மாதம் தோரயமாக 10000 ரூபாய் சம்பாதிப்பததே மிகவும் தடுமாற்றமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் எந்தெந்த வழிகளில் திறமையாக சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதில் ஒரு வழி பங்குச்சந்தை. ஒரு சிலருக்கு இந்த வார்த்தையை கேட்டதுமே இதில் சம்பாதிப்பவர்களை விட இழந்த மற்றும் இழந்து கொண்டிருப்பவர்கள்தானே அதிகம் என்று தோன்றும். உண்மையிலேயே இந்த பங்கு வர்த்தகத்தில் எத்தனையோ பேர் தங்கள் மொத்த சொத்துக்களையும் இழந்து கடைசியில் தங்கள் உயிரை கூட மாய்த்து கொண்டவர்கள் கூட உள்ளார்கள். இது உண்மைதான். ஆனால் இது மட்டும்தான் உண்மை என்று இல்லை.
பங்குச்சந்தையில் இழந்தவர்களுக்கு நிகராக ஒரு கூட்டமே இலட்சம் கோடி என்று சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒரு நாளில் எத்தனையோ மக்கள் பயணித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 99.9 சதவிகித மக்கள் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக தாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து விடுவார்கள். இவர்கள் யாவரும் வெளி உலகிற்கு தெரிய மாட்டார்கள். ஆனால் மீதம் உள்ள .1 சதவிகித பயணிகளுக்கு ஏதேனும் விபத்து அல்லது வேறு ஏதோ பிரச்சினை ஏற்பாட்டால் அவர்கள் கண்டிப்பாக வெளி உலகிற்கு தெரிய வருவார்கள்.
இதே போலதான் பங்குச்சந்தையும். இதில் வெற்றிகரகமாக எத்தனையோ பேர் சம்பாதித்து கொண்டிருக்க, தோல்வி அடைந்தவர்கள் எடுக்கும் சில தவறான முடிவு காரணங்களால் பங்குச்சந்தை என்பதே ஒரு சூதாட்டம் அல்லது அது ஒரு ஏமாற்று வேலை போன்ற கருத்துக்கள் நமது மக்களிடயே பதிந்து விட்டது.
என்னதான் பங்குச்சந்தையில் நாம் சுதாரிப்புடன் இருந்தாலும் நஷ்டம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும் முடியாது. நஷ்டமே இல்லாமல் சம்பாதிக்கவும் முடியாது. இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே இந்த பங்குச்சந்தையில் இறங்க வேண்டும்.
பங்குச்சந்தையில் தொடர்ந்து சம்பாதிக்க கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்
- ஒருசில Trading Platform கம்பனிகள் நீங்கள் 5000, 10000 வைத்திருந்தால் போதும், தினமும் 500 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்று கூறி அவர்களிடம் Demat Account துவங்க வைத்துவிடுவார்கள். கணடிப்பாக 5000, 10000 ரூபாய் முதலீட்டிற்கு 500 ரூபாய் மட்டுமல்ல அதற்கும் மேலே தாரளமாக நாம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நாம் குறைந்தது 1 அல்லது 2 வருடங்கள் பங்குச்சந்தை பற்றிய முழு விவரங்களை நீங்கள் கரைத்து குடித்திருக்க வேண்டும். முக்கியமாக ஒரு பெரிய தொகையை பங்குச்சந்தையில் இழந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு பங்குச்சந்தையின் சுயரூபம் தெரிய வரும்.
- எனவே நீங்கள்கற்றுக்கொள்வதற்கு ஒரு தொகையை கண்டிப்பாக இழக்க தயாராக இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் Trading செய்வதற்கு ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் இதற்காக செலவிடும் தொகை உங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- அதிகம் பேர் சொல்லுவார்கள் முதலில் Paper Trading செய்து பழகுங்கள் என்று. அதில் ஒரு பயனுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் முதலில் Trading என்றால் என்ன?, அதன் அடிப்படை என்ன என்று முதலில் தெரிந்த பிறகு Mini Script -ல் Trade செய்து பழக வேண்டும். ஏனென்றால் உங்கள் பணத்தை வைத்து நீங்கள் திருடிங் செய்யும்போது மட்டுமே பயம், சந்தோஷம், ஆர்வம், ஏக்கம், எதிர்பார்ப்பு இந்த மாதிரி எல்லாவிதமான உணர்வுகளையும் நாம் அனுபவித்து Trading செய்ய பழக முடியும். இந்த உணர்வுகளை பேப்பர் டிரேடிங்கில் நாம் பெற முடியாது.
- அடுத்தவர்களிடம் பணம் செலுத்தி Calls வாங்கி Trade செய்து பழக வேண்டும். ஏனெறால் இந்த பழக்கம் நம்மை கடைசி வரைக்கும் Trading கற்றுக்கொள்ளவே விடாது. ஆகவே சிறிது சிறிதாக இழந்தாலும் நாமே கற்றுக்கொண்டு சிறிய லாபமானாலும் அது நம்முடைய சொந்த முயற்சியில் இருக்க வேண்டும்.
- நல்ல Trading Platform நிறுவனத்தை நன்கு விசாரித்து அதில் கணக்கை துவங்க வேண்டும். மொபைலில் இருந்தும் நாம் எளிதாக Trading செய்யக்கூடிய வகையில் செயலிகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
Who Is The Best Trading Teacher? Trading சொல்லித்தர யாரவது சிறந்த நபர் இருக்கிறார்களா?
பங்குச்சந்தை பற்றி சொல்லித்தர ஒருவர் இருக்கிறார். இவரைத் தவிர எனக்குத்தெரிந்து யாரும் Trading பற்றி அவ்வளவு தெளிவாக, ஆணி அறைந்தது போல, திரும்பவும் நாம் அந்த தவறை செய்யாத அளவிற்கு நமக்கு சொல்லித்தரும் அந்த நபர் யார் தெரியுமா? யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்…
இன்றைய கால கட்டத்தில் பங்குச்சந்தையில் சம்பாதிப்பவர்களை விட பங்குச்சந்தையை வைத்து சம்பாதிப்பவர்கள்தான் அதிகம். Trading கற்றுக்கொடுக்க ஒரு தொகை, Trading calls கொடுக்க ஒரு தொகை, ஒன்றுக்குமே ஆகாத ஒரு Indicator பற்றி சொல்லி கொடுக்க ஒரு தொகை. அவர்கள் சொல்லும் ஒரு Trading platform நிறுவனத்தில் அவர்களுக்கு கீழே கணக்கை தொடங்கினால் Calls கொடுப்போம் என்று கூறி அடுத்தவர்கள் செய்யும் Trading -ன் மூலம் ஒரு தொகை. ஒரு இலட்சம் கொடுத்து கூட இந்த Trading கற்றுக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்த மாதிரி பல வகையில் பணம் பார்க்கும் இந்த தொழிலில் இவர்களை விட மிகவும் காஸ்ட்லியான ஒருவரால் மட்டுமே நமக்கு முழுமையாக கற்றுத்தர முடியும். அது யார் என்றால் அது “Trading” தான். ஆமாம்! நீங்கள் என்னதான் வெளியில் எவ்வளவு செலவு செய்து அடுத்தவர்கள் சொல்லிக்கொடுக்கும் முறைகளை வைத்து Trading செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வியே மிஞ்சும். ஆனால் ஏன் தோல்வி என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளுக்கு Trading தரும் இழப்பு பாடங்களின் மூலம் மிகச்சிறந்த பக்குவம் கிடைக்கும். அது மறக்கவும் முடியாததாக இருக்கும்.
எனவே பணத்தை வெளியில் கொடுத்து ஏமாறாமல் நீங்களே இழந்து கற்றுக்கொள்ளுங்கள். பங்குச்சந்தையில் நிலைத்து நின்று சம்பாதிப்பீர்கள்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.