TNPSC மற்றும் TNTET ஆகிய தேர்வுகளுக்கு முக்கியமான வின-விடைகளை தேர்வு செய்து, தொடர்ந்து பதிவிடுகிறோம். எனவே இதை நீங்கள் தரவு செய்தாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
தொடர்களும் ஆசிரியர்களும்
- யாதும் ஊரே – யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்
- இந்தியா மொழிகளின் காட்சி சாலை – பேரா.அகத்தியலிங்கம்
- திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு – ஒளவையார்
- நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் -திரு.வி.க
- பசி வந்திடப் பத்தும் பறந்து போம் – ஒளவையார்
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -திருவள்ளுவர்
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் -பாரதியார்
- எளிய நடையில் தமிழ் நூல்கள் எலுதிடவும் வேண்டும் -பாரதிதாசன்
- தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார் – பாரதிதாசன்
- உலகில் முதல் மாந்தன் தமிழன் தமிழன் தோன்றிய
- இடம் குமரிக்கண்டம் – தேவநேயப்பாவாணர்
- தமிழன் என்றோர் இனமுண்டு –தனியே அவர்கொரு குணமுண்டு -நாமக்கல் கவிஞர்
- மங்கையராகப் பிறப்பதற்கே-நல்ல மாதவம் செய்தல் வேண்டுமம்மா – கவிமணி
- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் – நாமக்கல் கவிஞர்
- உண்பது நாழி – உடுப்பது இரண்டே – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
- செல்வத்துப் பயனே ஈதல் – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
- ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! -திருமூலர்
- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர்
- உடம்பார் அழியின் உயிரார் அழிவார் – திருமூலர்
- யாவர்க்குமாம் இறைவற்க்கொரு பச்சிலை – திருமூலர்
- எனக்கு வறுமையும் உண்டு – மனைவி மக்களும் உண்டு –அவற்றோடு மானமும் உண்டு – தேவநேயப்பாவாணர்
- ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி – பாரதியார்
- உலகில் நாகரீகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் , திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்,
- மீண்டும் அதை புதுப்பித்து விடலாம் – கால்டுவெல்
- பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ சேக்கிழார் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப்பெருக்கே இறையே பராபரமே – தாயுமானவர்
- நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – திருநாவுக்கரசர்
- என்கடன் பணிசெய்து கிடப்பதே – திருநாவுக்கரசர்
- அறிவு அற்றம் காக்கும் கருவி – திருவள்ளுவர்
- தனியொருவனுக்கு உணவில்லையெனில்; ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதியார்
- அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் – ஒளவையார்
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] TNTET போன்ற தமிழக அரசு நடத்தும் […]
[…] TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு […]
[…] TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு […]