TNPSC TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1. கரும்பு, நாணல் என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
– தோகை
2. சீரிளமை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– சீர்மை+இளமை
3.’ மருந்து ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
– அகநானூறு 147, திருக்குறள் 952
4. பனை, தென்னை என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
– ஓலை
5. 1 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– க
6. ஊர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
– தொல்காப்பியம், அகத்தினை 41
7.’ கமுகு ‘ என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
– கூந்தல்
8. அன்பு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
– தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84
9. கடல் நீர் ஆவியாகி____ஆகும்
– மேகம்
10. உயிர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம், கிளவியாக்கம் 56, திருக்குறள் 955
11. 2 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– உ
12. பழந்தமிழ் இலக்கியங்கள் யாவை?
– முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,கார்நாற்பது, திருப்பாவை
13.’ மகிழ்ச்சி ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம், கற்பியல் 142, திருக்குறள் 531
14. 3 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– ௩
15.’ மீன் ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– குறுந்தொகை 54
16. 4 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– ச
17. புகழ் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம்,வேற்றுமையில் 71
18. 5 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– ரு
19. ‘ ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி ‘ என்ற பாடலின் ஆசிரியர் யாது?
– ஒவையார்
20. அரசு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– திருக்குறள் 554
21. 6 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– ௬
22. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்?
– பதிற்றுப்பத்து
TNPSC TNTET முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.