TNPSC TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு யாது?
– மொழி
2. தமிழ் மொழி சிறப்பு மிக்க__ஆகும்.
– செம்மொழி
3. வலஞ்சுழி எழுத்துகள் யாவை?
– அ, எ, ஒள, ண, ஞ
4.இடஞ்சுழி எழுத்துகள் யாவை?
– ட, ய, ழ
5. தமிழ் மொழியின் இலக்கண நூல்கள் யாவை?
– தொல்க்காப்பியம், நன்னூல்
6. பல மொழிகளை கற்ற கவிஞர் யார்?
– பாரதியார்
7. தமிழ் மொழியில் உள்ளத்தை மகிழ்விப்பது எது?
– இசைத்தமிழ்
8. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்
என்று தமித்தாயின் தொண்மையைப் பாடியவர் யார்?
– பாரதியார்
9. தமிழ் மொழியின் பழமையான நூல் யாது?
– தொல்காப்பியம்
10. தமிழ் மொழியின் சங்க இலக்கிய நூல்கள் யாவை?
– எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
11. தமிழ் மொழியின் அறநூல்கள் யாவை?
– திருக்குறள், நாலடியார்
12. தமிழ் மொழி எத்தனை காப்பியங்களை கொண்டது?
– இரண்டு
13. தமிழ் மொழியின் எண்ணத்தை வெளிப்படுத்துவது எது?
– இயல்தமிழ்
14. தமிழ் மொழியில் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப் படுத்துவது எது?
– நாடகத்தமிழ்
15. தமிழ் மொழியின் காப்பியங்கள் யாவை?
– சிலப்பதிகாரம்,மணிமேகலை
16. தமிழின் கவிதை வடிவங்கள் யாவை?
– துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
17. தமிழின் உரைநடை வடிவங்கள் யாவை?
– கட்டுரை, புதினம், சிறுகதை
18. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப தமிழில் உள்ள புதிய கலைச்சொற்கள் யாவை?
– இணையம், முகநூல், புலனம், குரல்தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை
19. முதலில் தமிழில் ஆளப்படும் இலக்கியம் எது?
– தொல்காப்பியம்
20. முதன் முதலில் தமிழ்நாட்டில் ஆளப்படும் இலக்கியம் எது?
– சிலப்பதிகாரம்,வஞ்சிக்காண்டம்
21. முதலில் தமிழனால் ஆளப்படும் இலக்கியம் எது?
– அப்பர் தேவாரம்
22. பாகற்காய் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? -பாகு+அல்+காய்
23. ஆல், அரசு, மா, பலா, வாழை அகியவற்றின் தாவர இலைப் பெயர் யாது?
– இலை
24.’ வேளாண்மை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
– கலித்தொகை 101, திருக்குறள் 81
25. அகத்தி, பசலை, முருங்கை ஆகியவற்றின் தாவர இலைப் பெயர் யாது?
– கீரை
26.’ உழவர் ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
– நற்றிணை 4
27. அருகு, கோரை என்ற சொற்களின் தாவர இலைப் பெயர் யாது?
– புல்
28.’ பாம்பு ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
– குறுந்தொகை 239
29. நெல், வரகு என்ற சொற்களின் தாவர இலை பெயர் யாது?
– தாள்
30.’ வெள்ளம் ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
– பதிற்றுப்பத்து 15
31. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்?
– பாரதியார்
32. கணினி+தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
– கணினித்தமிழ்
33. கரும்பு, நாணல் என்ற சொல்லின் தாவர இலைப் பெயர்?
– தோகை
34. இனிமையுடைய தமிழ் இலக்கியங்கள் யாவை?
– ஓசை, சொல், பொருள்
35. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது?
– மொழி
36. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
– எண்களின்
37. சிலம்பு+அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
– சிலப்பதிகாரம்
38.’ முதலை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல் யாது?
– குறுந்தொகை 324
39.’ மல்லி ‘ என்ற சொல்லின் தாவர இலைப் பெயர்?
– தழை
40.’ தொன்மை ‘ என்ற சொல்லின் பொருள்?
– பழமை
41. இடப்புறம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– இடது+புறம்
42.’ கோடை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
– அகநானூறு 42
43.’ மா ‘ என்னும் சொல்லின் பொருள்?
– விலங்கு
44. சப்பாத்திக் கள்ளி, தாழை என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
– மடல்
45.’ உலகம் ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
– தொல்காப்பியம், கிளவியாக்கம் 52,திருமுருகாற்றுப்படை 1
TNPSC TNTET முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.