Tnpsc questions in tamil
tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.
இவை இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.
இதற்காக நாங்கள் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வரை உள்ள பாடங்களிலிருந்து வினா விடைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து பதிவிட்டு வருகிறோம். இந்த Tnpsc questions – களை படித்து பயன்பெறுங்கள்.
1.பொங்கல் என்பதன் பொருள் யாது?
– பொங்கிப் பெருகி வருவது
2. மாடு என்னும் சொல்லின் பொருள் யாது?
– செல்வம்
3. மஞ்சுவிரட்டின் வெறுபெயர்கள் யாவை?
– மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்
4. எவற்றை எல்லாம் பொங்கல் விழா போற்றுகிறது?
– இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு
5. கதிர் முற்றியதும்_____செய்வர்?
– அறுவடை
6. விழா காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையாள்____கட்டுவர்?
-தோரணம்
7. பொங்கல்+அன்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
– பொங்கலன்று
8. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– போகி+பண்டிகை
9. பழையன கழிதலும்_____புகுதலும்?
– புதியன
10. பச்சை பசேல் என்ற வயலைக் காண____தரும்?
– இன்பம்
11. பட்டுப்போன மரத்தைக் கான____தரும்?
– துன்பம்
12. பல்லவ அரசனின் பெயர்?
– நரசிம்மவர்மன்
13.நரசிம்மவர்மன் எதில் சிறந்தவன்?
– மற்போரில்
14. மற்போரில் சிறந்ததால் நரசிம்மவர்மனுக்கு____பெயர் உண்டு?
– மாமல்லன்
15. ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில்_____போன்ற வடிவத்தில் இருக்கும்?
– இரதம் (தேர்)
16. ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட கோவிலின் மற்றொரு பெயர்?
– இரதக்கோவில்
17. ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு____என்று பெயர்?
– பஞ்ச பாண்டவர் இரதம்
18. இரதங்கள் எத்தனை?
– ஐந்து
19.நரசிம்மவர்மன்____நூற்றாண்டைச் சேர்ந்தவன்?
– ஏழாம்
20.மாமல்லபுரத்தில் எத்தனை இடங்கள் உள்ளன?
– ஒன்பது
21.மாமல்லபுரத்தில் உள்ள இடங்கள் யாவை?
1. அர்சுணன் தபசு
2. கடற்கரைக் கோவில்
3. பஞ்ச பாண்டவர் இரதம்
4. ஒற்றைக் கல் யானை
5. குகைக் கோவில்
6. புலிக்குகை
7. திருக்கடல் மல்லை
8. கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து
9. கலங்கரை விளக்கம்
22. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் செதுக்கப்பட்ட பாறையின் பெயர் யாது?
– அர்சுணன் தபசு
23. உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக தெரியும் சிற்ப்பத்திற்க்கு பெயர் யாது?
– புடைப்புச் சிற்பங்கள்
24. அர்சுணன் தபசு மற்றும் புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில்______மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன?
– நூற்று ஐம்பதுக்கும்
25.தமிழகத்தின் மிகப் பெரிய சிற்பக்கலைக் கூடம்?
– மாமல்லபுரம்
26.______பூமிக்கு வருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது?
– ஆகாயக்கங்கை
27. சிற்பக் கலைகள் எத்தனை வகைப்படும்?
– நான்கு
28. சிற்பக் கலைகள் யாவை?
– குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள்
29. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை____என்கிறோம்?
– மயங்கொலிகள்
30. மயங்கொலி எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
– எட்டு