Tnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -17

0
3698
tnpsc group 4 important questions,tnpsc group 4 tamil,tnpsc group 4,tnpsc group 4 science important,tnpsc important questions,tnpsc,tnpsc group 4 science questions and answers in tamil,tnpsc group 2a important topics,tnpsc tamil importaant questions,tnpsc group 4 vao exam pattern,tnpsc group 4 science shortcut,tnpsc group 4 vao,tnpsc group 4 science syllabus,tnpsc group 4 study plan,group 4

Tnpsc question answer : Tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.

இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.

கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதன் கலைச்சொல்லாக்கம் என்ன?

உயர்தனிச்செம்மொழி.

சிலபபதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை?

30.

தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனைம ருகின் மதுரை என்று கூறும் நூல் எது?

சிறுபாணாற்றுப்படை.

அகத்தியம் கூறும் 5 இலக்கணங்கள் யாவை?

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சர் பணியாற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்.

எழு சீர்களால் அமைந்த வெண்பாக்கள் கொண்ட நூல் எது?

திருக்குறள்.

கனகம் என்பதன் பொருள் என்ன?

பொன்.

கெலன் கெல்லர் படித்த பள்ளியின் பெயர் என்ன?

பெர்கின்ஸ் பள்ளி.

முக்கூடற்பள்ளு கூறும் 3 ஆறுகள் யாவை?

சிற்றாறு, கோதண்டராம  ஆறு,தன்பொருனை ஆறு.

திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

3.

சோழ நாடு எதற்கு பெயர் பெற்றது?

சோழ நாடு சோறுடைத்து.

நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை நூல்களை இயற்றியவர் யார்?

நக்கீரன்.

சேரர் கால ஓவியங்கள் எங்கு காணப்படும்?

திரு நந்திக்கரை.

உவமை கவிஞர் என யார் அழைக்கப்படுபவர்?

சுரதா.

மூதூர் என்பது எந்த திணைக்குரியது?

மருதம்.

தமிழ் மொழியில் மிக பழமையான நூல் எது?

தொல்காப்பியம்.

பூதஞ்சேந்தனார் எந்த காலத்தில் வாழ்ந்தார்?

இரண்டாம் நூற்றாண்டு.

நாடக பேராசிரியர் என யாரை கூறுவர்?

பரிதிமாற் கலைஞர்.

தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி எது?

அபிதான கோசம்.

தினையளவு என்னும் பாடலில் எந்த அணுகுமுறை அமைந்துள்ளது?

அறிவியல்.

மாணிக்க வாசகர் பிறந்த ஓர் எது?

திருவாதவூர்.

மொழியின் அடிப்படை திறன்கள் யாவை?

கேட்டல்,படித்தல்,பேசுதல்,எழுதுதல்.

வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் யார்?

பக்கிம் சந்திரர்.

மருதம் – ஓரம்போகியார்.

நெய்தல்- அம்மூவனார்.

குறிஞ்சி- கபிலர்.

பாலை- ஓதலாந்தையார்.

முல்லை- பேயனார்.

பாடல்கள் மூலமாக கவிதைகள் எழுதுவதற்கு பெயர் என்ன?

சீட்டுக் கவி.

எந்நாளோ? நூலின் ஆசிரியர் யார்?

பாரதிதாசன்.

பூக்கட்டும் புதுமை நூலின் ஆசிரியர் யார்?

முதியரசன்.

விடுதலை விளைத்த உரிமை நூலின் ஆசிரியர் யார்?

கண்ணதாசன்.

தளை நூலின் ஆசிரியர் யார்?

சிப்பி பாலசுப்ரமணியம்.

ஐகுருநூற்றை தொகுப்பித்தவர் யார்?

யானைக்கட்சேய் மாந்த ர இஞ் சேரல் இரும்பொறை.

தமிழ் அகராதியின் தந்தை என்ன போற்ற படுபவர் யார்?

கான்டான்டின் ஜோசப் பெஸ்கி.

புலன் என்னும்  இலக்கிய வகை எந்த இலக்கியத்திர்க்கு பொருந்தும்?

பள்ளு.

சந்து இலக்கியம் என அழைக்கப்படுபவது எது?

தூது இலக்கியம் .

தண்ணீர் நூலின் ஆசிரியர் யார்?

அசோகமித்திரனின்.

அகநானூரில் காணப்படும் அடிகள்

13முதல் 31

நற்றிணையில் காணப்படும் அடிகள்

9 முதல் 12

குறுந்தொகை  காணப்படும் அடிகள்

4முதல்8

ஐகுறுநூரு காணப்படும் அடிகள்

3முதல் 6.