Tnpsc question answer : Tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.
இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.
*வாயசம் என்பதன் பொருள் என்ன?
காகம்.
*பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் பாடல் இயற்றியவர் யார்?
தாயுமானவர்.
*வண்மை என்பதன் பொருள் என்ன?
கொடைத்தன்மை.
*விடுதலைக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்.
*கூந்தங்குளாம் எந்த மாவட்டத்தை சார்ந்தது?
திருநெல்வேலி.
*ஜீவகாருண்ய ஒழுக்கம்,மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
இராமலிங்க அடிகள்.
*வாணிதாசன் பிறந்த வருடம்?
22.07.1915.
*தொண்ணூற்று ஒன்பது பூசிகளின் பெயர்களை விளக்கும் நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு.
*பாரதியார் வாழ்ந்த காலம் என்ன?
11.12.1882 முதல்11.09.1921 வரை.
*கிறித்துவக் கம்பன் என அழைக்கப்படுபவர் யார்?
கிருஷ்ணப் பிள்ளை.
*பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
ஆண்டாள்.
*வீரசோழியம் பாடியவர் யார்?
புத்த மித்திரர்.
*நாய்க்கால் சிறுவிரல் போல் நனகணிய ராயிணும் என்ற பாடல் வரி …..நூலில் இடம்பெற்றுள்ளது
நாலடியார்
*பாண்டியன் பரிசு,குடும்ப விளக்கு,அழகின் சிரிப்பு போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்.
*வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார்?
வள்ளலார்.
*சுந்தர தாகம் நூலின் ஆசிரியர் யார்?
சி.சு.செல்லப்பா.
*மருள் நீக்கியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
அப்பர்.
*ஒரு கிராமத்து நதிக்கரையில் என்ற நூலின் ஆசிரியர் யார்?
சிப்பி பாலசுப்ரமணியம்.
*ஆலாபனை நூலின் ஆசிரியர் யார்?
அப்துல் ரகுமான்.
*புலரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
கல்யாண் ஜி.
*நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்.
*மணிக்கொடி இதழில் புது கவிதை இயற்றியவர்கள் யாவர்?
கு.பா.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி,க.நா.சுப்ரமணியன்,புதுமைப்பித்தன்.
*ஆசிரியராக பணியாற்றி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் யார்?
தாராபாரதி.
*ஆயிரம் படகுகளுக்கு தலைவன் யார்?
குகன்.
*பெரியார் தம் இரு கண்களை போல கருதியவை எவை?
சுயமரியாதையும்,மரியாதையும்.
*பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார்
*இராமானுசன் அனைத்துலக நினைவு குழு சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1971 ம் ஆண்டு.
*மரை என்பதன் பொருள் என்ன?
மான்.
*வைணவ சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறிய புலவர் யார்?
காளமேகப்புலவர்.
*பெண்கள் கல்வி கற் றாலொழிய சமூக மாற்றங்கள் ஈர்ப்படாது எனக் கூறியவர் யார்?
பெரியார்.