உடல் நாற்றமா? வாய் நாற்றமா? கவலைய விடுங்க ஒரே நாளில் சரி செய்யலாம்

0
2020

Contents

உடல் வியர்வை நாற்றம் மற்றும் வாய் நாற்றம்

இன்றைய கால கட்டத்தில் நாம் எடுக்கும் உணவுகள், வெளியில் இருக்கும் மாசுகள், நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள், நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் போன்றவற்றால் நம் உடம்லில் வியர்வை நாற்றமும், வாயில் துர்நாற்றமும் ஏற்படுகிறது.

இதனால் அடுத்தவர்கள் முன்பு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் அனேக மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கும் ஆளாகின்றனர்.

sweating problem, வியர்வை நாற்றம்

இயற்கையான முறையில் இவை இரண்டையும் போக்கும் வழியை பார்க்கலாம்

வியர்வை நாற்றம் போக

  • அசல் சந்தனம் வாங்கி காலை குளித்த பின் உரசி அக்குள் மற்றும் உடல் பகுதிகளில் தடவி வர உடலில் வியர்வை நாற்றம் இருக்காது. கெமிக்கல் நிறைந்த செண்டு, பாடி ஸ்ப்ரே, பவுடர்கள் போன்றவைகள் பயன்படுத்துவதற்க்கு பதிலாக சந்தனத்தைப் பயன்படுத்தினால் உடலுக்கும் குளிர்ச்சியாகும்.
  • அடுத்து ஒரு சிறந்த இயற்கை வழி எலுமிச்சை. நாம் குளிக்கப்போகும் நீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் வியர்வை நாற்றம் நம் உடலை அண்டாது.
  • கிராமங்களில் ஆவாரம்பூ நிறைய கிடைக்கும். அதை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதனுடன் பயித்தம் மாவு சேர்த்து குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
  • வியர்வை என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அது நமக்கு துர்நாற்றமாக மாறும்போதுதான் பிரச்சினை. அதற்கு இந்த இயற்கை முறைகளை பயன்படுத்தி போக்கவேண்டுமே தவிர பவுடர் போன்றவற்றை உடல் முழுவதும் பூசி வியர்க்கவிடாமலும் செய்யக்கூடாது.

வாய் நாற்றம் போக

sweating problem, வியர்வை நாற்றம்

  • வாய்நாற்றம் பொதுவாக பற்களில் பூச்சிகளினால் ஏற்படும் துளைகளில் மாட்டிக்கொள்ளும் உணவு துகல்களினாலும், ஈறு பிரச்சினைகளாலும், தொண்டையில் ஏற்படும் தொற்றுகளினாலும், மலச்சிக்கல், வயிற்றுப் புண்கள் இவற்றினால் வரும்.
  • இந்த பிரச்சினைக்கு சூப்பரான ஒரு இயற்கை வைத்தியம் ஆயில் புல்லிங். நல்லெண்ணையில் கிருமிகள் சுவாசிக்க முடியாமல் இறந்து போகும். எனவே தான் ஆயில் புல்லிங் முறை நல்ல பலனை கொடுக்கிறது. காலை எழுந்ததும் வாய் கொப்பளித்து விட்டு, போதுமான அளவு நல்லெண்ணை வாயில் எடுத்து 10 நிமிடங்கள் எண்ணை வெண்மை நிறமாகும் அளவிற்கு கொப்பளித்து துப்பிவிட்டு, பிறகு பல்துலக்க வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணரலாம். இந்த ஆயில் புல்லிங் முறை வாய் நாற்றம், ஈறு பிரச்சினைகள் மட்டுமின்றி ஏராளமான நோய்களையும் தீர்க்கும்.
  • ஒரு நாளைக்கு 3 வேளை எலுமிச்சை சாறு மற்றும் புதினா சாறும் நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நாற்றம் நீங்கும்.
  • மேலும் வயிற்றில் அல்சர் பிரச்சினை, அமில சுரப்பு பிரச்சினை இருந்தாலும் இந்த வாய் நாற்றம் அதற்கான அறிகுறியாக இருக்கும். எனவே அதை அலட்சியம் செய்யாமல் அதை சரி செய்து கொள்ளுங்கள்.
  • மிக மிக முக்கியம் இரவு சாப்பிட்ட பின் பல் துலக்குவது. இதை செய்தாலே போதும் பற்கள் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் வரும் வாய் நாற்றம் நம் பக்கமே வராது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.