தனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

0
2413
Thanusu, thanusu rasi, thanusu, thanusu rasi guru peurchi, thanusu guru peyarchi, thanusu rasi guru peyarchi, thanusu rasi guru peyarchi palangal, thanusu rasi guru peyarchi palangal,தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thanusu rasi guru peyarchi 2018 in tamil , Sagittarius horoscope 2018, Sagittarius, Sagittarius guru peyarchi 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

Contents

குருப்பெயர்ச்சி 2018 2019

தனுசு

தனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

பலன்கள் யாருக்கு நடக்கும்

பலன்கள் யாருக்கு நடக்காது

குருப்பெயர்ச்சி பலன்கள்

               தனுசு ராசிக்கு இதுவரை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

குரு நிற்க போவது                     – பன்னிரண்டாமிடம்        –     (விருச்சிகம்)

குருவின் ஐந்தாம் பார்வை        – நான்காமிடம்                  –     (மீனம்)

குருவின் ஏழாம் பார்வை          – ஆறாமிடம்                      –     (ரிஷபம்)

குருவின் ஒன்பதாம் பார்வை    – எட்டாமிடம்                    –     (கடகம்)

உண்மையில் ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது சனியின் கெடுபலன்கள் மட்டுமே முன்னே நிற்கும். மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும் கூட அதை சனி தடுப்பார்.

கடந்த மூன்று வருடங்களாக நடந்த எந்தக் குருப்பெயர்ச்சியும் தனுசு ராசிக்கு நல்ல, கெட்ட பலன்களைத் தரவில்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஏழரைச் சனியின் சாதகமற்ற பலன்கள் மட்டும்தான் தனுசு ராசிக்கு முன்னே நின்றது.

சுபக் கிரகங்கள் விரய ஸ்தானம் எனப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச் செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும் என்பதாலும், செலவு செய்துதான் மன நிறைவை அனுபவிக்க முடியும் என்பதாலும், செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும்.

செலவு செய்யப் போகிறீர்கள் என்றால் வருமானம் வரப் போகிறது என்று அர்த்தம். வரவு வந்தால்தானே தொடர்ந்து செலவு செய்ய முடியும்? கடன் வாங்கி எந்தனை நாள் செலவு செய்ய முடியும்? எனவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் தனுசு ராசிக்கு சுபச் செலவு செய்யப் போதுமான வருமானங்கள் வரும் என்பதே குருபகவான் உங்களுக்குத் தரும் செய்தி.

நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

பதவி உயர்வு கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் வருவார்.

குடும்பங்களில் இதுவரை தாமதமாகி வந்த திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான பூப்புனித நீராட்டு விழா போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன் வருவதற்கான பிரசவச் செலவுகள் போன்ற சுப காரியச் செலவுகள் இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப் போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள், கனவுகள் ஆகியவை நிறைவேறும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும், மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

சுய தொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். சினிமா, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்

  • வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
  • திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)

குருவின் சுப பார்வையானது, தனுசு  ராசியினருக்கு நான்கு, ஆறு, மற்றும் எட்டு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

குருவின் நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ, ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.

பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க தடங்கல்கள் விலகும்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.

எட்டாமிடம் வலுப் பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

மேலும் சில முக்கிய பலன்கள்

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியால் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இனிமேல் தனுசு ராசியினருக்கு எந்தக் குறையும் வராது என்பது உறுதி.

யாருக்கு பலன்கள் நடக்கும்?

      இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், தனுசு ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.

தனுசு ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும். 

பலன்கள் நடக்க தேவையான அமைப்பு

(அவரவர் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்

பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்

  • சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
  • சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
  • சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்

Thanusu, thanusu rasi, thanusu, thanusu rasi guru peurchi, thanusu guru peyarchi, thanusu rasi guru peyarchi, thanusu rasi guru peyarchi palangal, thanusu rasi guru peyarchi palangal,தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thanusu rasi guru peyarchi 2018 in tamil , Sagittarius horoscope 2018, Sagittarius, Sagittarius guru peyarchi 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

  • விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
  • ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
  • கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

யாருக்கு பலன்கள் நடக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.

இறைவழிபாடு

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு     –     செவ்வாய்க்கிழமை

ரிஷபம் அல்லது துலாமில் குரு              –     வெள்ளிக்கிழமை

மிதுனம் அல்லது கன்னியில் குரு          –     புதன்கிழமை

கடகத்தில் குரு                                       –     திங்கட்கிழமை

சிம்மத்தில் குரு                                      –     ஞாயிற்றுக்கிழமை

தனுசு அல்லது மீனத்தில் குரு               –     வியாழக்கிழமை

மகரம் அல்லது கும்பத்தில் குரு            –     சனிக்கிழமை

வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Thanusu, thanusu rasi, thanusu, thanusu rasi guru peurchi, thanusu guru peyarchi, thanusu rasi guru peyarchi, thanusu rasi guru peyarchi palangal, thanusu rasi guru peyarchi palangal,தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,தனுசு ராசி குருப்பெயர்ச்சி, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, தனுசு ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thanusu rasi guru peyarchi 2018 in tamil , Sagittarius horoscope 2018, Sagittarius, Sagittarius guru peyarchi 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

*********************************

தனுசு ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ

https://youtu.be/SmzmAGcieCI

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி  உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி  அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.