Sugar card to Rice Card – சர்க்கரை அட்டை -யிலிருந்து அரிசி அட்டை -க்கு மாற்ற
தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் சர்க்கரை அட்டை -களையும் அரிசி அட்டை -யாக மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே எங்கும் அலையாமல், வரிசையில் நிற்காமல் நமது மொபைலில் இருந்தே இரண்டு நிமிடங்களில் நாமே மாற்றிக்கொள்ளலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
TNPDS என்று Google -ல் டைப் செய்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், தமிழ் நாடு அரசு பொது விநியோகத் திட்டம் என்ற இணையதளத்திற்குள் செல்லுங்கள்.
அதில் தங்களது அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யவும் என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு வரும் பக்கத்தில் நீங்கள் உங்கள் Smart Ration Card -ல் எந்த மொபைல் எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை டைப் செய்து பின் Capatcha Numaber யும் டைப் செய்து அந்த மொபைல் எண்ணிற்கு வரும் OTP Numaber ஐ டைப் செய்து பதிவு செய்என்பதை கிளிக் செய்தால் log in ஆகிவிடும்.
பின்னர் வரும் பக்கத்தில் தற்போதைய அட்டை வகையில் சர்க்கரை அட்டை என்று இருக்கும்.
அதற்கு கீழே புதிய அட்டை வகையை தேர்ந்தெடுக்கவும் என்று இருக்கும். அதை கிளிக் செய்து அரிசி அட்டை என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் கீழே உறுதிபடுத்துதல் என்பதை கிளிக் செய்து பின்னர் வரும் குறிப்பு என்னை வைத்துகொண்டு நமது விண்ணப்பத்தின் நிலை அறிந்துகொள்ளலாம்.
Tamilnadu Smart Ration Card Sugar Card to Rice Card
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.