SBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

0
1677
SBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட்கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Contents

Sbi Credit card எஸ்பிஐ கிரெடிட் கார்டு

Sbi Credit card கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு பாதுகாப்பு முறை சப் லிமிட் ஆகும்.

நாம் பயன்படுத்தும் கிரெடிட்கார்டுக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம் கூட கிரடிட் லிமிட்ஸ் இருக்கலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் தொகை மாதம் எடுத்துக்காட்டிற்கு 10,000, 20,000 ஆக கூட இருக்கலாம்.

மீத தொகையை ஆன்லைனிலேயே முடக்கி வைப்பதன் மூலமாக, எதிர்காலத்தில் நமது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டு நமது முழு தொகையையும் இழப்பதில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்தப் பதிவில் எஸ்பிஐ கிரெடிட்கார்டு சப் லிமிட் எவ்வாறு ஆன்லைனிலேயே நிர்ணயிப்பது மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளை எவ்வாறு நிறுத்தி வைப்பது என்ற தகவல்களை பார்க்கலாம்.

SBI Credit Card எஸ்பிஐ கிரெடிட்கார்டு Sublimit 

SBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட்கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  1. எஸ்பிஐ கிரெடிட்கார்டு க்கு சப் லிமிட் செட் செய்வதற்கு கிரெடிட் கார்டுக்கு என்று தனியாக நெட் பேங்கிங் ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும். எஸ்பிஐ கிரெடிட்கார்டு தளத்திலும், மொபைல் ஆப்-லும் இந்த கோரிக்கையை விண்ணப்பிக்க முடியும்.
  2. நெட் பேங்கிங் ஆக்டிவேட் செய்தவர்கள் லாகின் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை ஆக்டிவேட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து New Register என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  3. அங்கே உங்களது கார்டு தகவல்கள் உங்களது பதிவு மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மற்றும் யூசர் ஐடி பாஸ்வேர்ட் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதை வைத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
  4. இடது புறம் இருக்கும் மெனு பட்டனை கிளிக் செய்து Services என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அதில் Manage Card Usage என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இங்கே டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் பரிவர்த்தனைகள் என்று இரண்டு சேவைகள் இருக்கும்.
  6. இன்டர்நேஷனல் பரிவர்த்தனைகள் தேவை இல்லை என்றால் அதில் உள்ள அனைத்து பட்டன்களையும் ஆப் செய்து வைத்துக்கொள்ளலாம்.
  7. டொமஸ்டிக் என்பது நாம் நாட்டில் செய்யும் பரிவர்த்தனைகள். இதில் ஆன்லைன், நேரடியாக சென்று பொருட்கள் வாங்கி பரிவர்த்தனை செய்வது, எஸ்பிஐ கிரடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுப்பது போன்ற சேவைகளில் ஏதேனும் உங்களுக்கு தேவை இல்லை என்றால் அதை ஆஃப் செய்து கொள்ளலாம்.
  8. அனைத்து சேவைகளும் தேவை என்ற பட்சத்தில், எடுத்துக்காட்டிற்கு ஆன்லைனில் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் போதும், நேரடியாக சென்று பரிவர்த்தனை செய்யும் போது 20 ஆயிரம் ரூபாய் மட்டும் போதும், ஏடிஎம்மில் வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் போதும் என்று குறைத்து வைத்துக்கொள்ள Set Your Spend Limits என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  9. பின்னர் ஒவ்வொரு பரிவர்த்தனை முறைகளுக்கும் எவ்வளவு தொகை என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
  10. எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் Apply என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களது பதிவு மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். இதற்கான இடத்தில் டைப் செய்து Submit என்பதைக் கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களது கோரிக்கை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும்.
  11. ஒரு நீங்கள் இந்த தொகையை உயர்த்த விரும்பினால் இதே முறையில் உயர்த்தி உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

வீடியோ