SBI Credit Card
இன்று நம்மில் அதிகம் பேர் SBI Credit Card பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் காசோலை மூலமாக நமது தொகையை செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது முக்கால்வாசி பேர்கள் ஆன்லைன்மூலமாக மட்டுமே தங்களது தொகையை செலுத்தி வருகிறார்கள்.
Google -ல் சென்று Billdesk வழியாக நாம் செலுத்தும் தொகை நமது கிரெடிட்கார்டு கணக்கிற்கு சென்று சேர ஒருசில நாட்கள் ஆகும். எனவே நாம் முன்கூட்டியே நமது தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் தற்போது நமது வங்கி கணக்கின் Net Banking மூலம் NEFT முறையில் நமது தொகையை செலுத்தும் முறை ஏற்கனவே வந்து விட்டது. ஆனாலும் அதிகம்பேர் இந்த முறையை பயன்படுத்துவதில்லை. அனால் முற்றிலும் பாதுகாப்பானது இந்த முறையே. வங்கி நாட்களில் இந்த முறையில் நாம் செலுத்தும் தொகை அன்றைய தினமே நமது கிரடிட்கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்கு நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அதில் Net Banking வாங்கி வைத்திருக்க வேண்டும்.
SBI கிரெடிட்கார்டு NEFT Details
நீங்கள் SBI அல்லாது வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் வங்கி Net banking -ற்குள் சென்று Add Beneficiary ஐ கிளிக் செய்து Other Bank என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Account Number என்பதில் உங்கள் SBI கிரெடிட்கார்டின் 16 இலக்க எண்களை டைப் செய்யுங்கள்.
Account Type என்பதில் Card Payment என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
Beneficiary என்பதில் உங்கள் பெயர் SBI கிரெடிட்கார்டில் உள்ளவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.
IFSC Code என்பதில் SBIN00CARDS என்று டைப் செய்யுங்கள்.
பின்னர் வழக்கம் போல நீங்கள் NEFT Payment செய்யும் முறையில் உங்களது SBI கிரெடிட்கார்டின் தொகையை செலுத்தலாம்.
அனைவருக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலைய தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.
All Indian Bank Detailes https://dosomethingnew.in/category/indian-bank-ifsc-code-micr-code-balance-check-number/
மேலும் பயனுள்ள பதிவுகளுக்கு கிளிக் செய்யுங்கள். https://dosomethingnew.in/category/latest-news/