அடேங்கப்பா!!! சாத்துக்குடி பழத்தில் இவ்ளோ இருக்கா?

0
8385
Sathukudi, sathukudi benefits in tamil, sathukudi juice benefits in tamil, mosambi juice meaning in tamil, sathukudi juice in tamil, sathukudi benefits, சாத்துக்குடி, சாத்துக்குடி பயன்கள், சாத்துக்குடி பழச்சாறு, சாத்துக்குடி பழச்சாறு பயன்கள்,

              ஆதிகால மனிதர்கள் பழங்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தனர். அவர்கள் நல்ல ஊட்டச்சத்துடனும் ஆரோக்கியதுடன்தான் வாழ்ந்து வந்தனர். ஏனென்றால் ஒரு மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே பழங்களில் கிடைக்கிறது. இப்பொழுதுள்ள மாசு நிறைந்த கலப்பட உலகத்தில் பெரும்பாலான மக்கள் உணவுகளை குறைத்து பழங்களையும் பழச்சாறுகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள பழகிவிட்டார்கள்.

              காரணம் பழங்களில் கொழுப்பு இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும். அனைத்து பழங்களிலுமே எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வரிசையில் சாத்துக்குடி பழம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

                 பழங்களில் மிகவும் சிறந்தது சாத்துக்குடி ஆகும். சாத்துக்குடியை பழமாக உரித்து சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடிப்பதற்கு மிகவும் சிறந்த பழமாகும். 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பதற்கு ஏற்றது இந்த சாத்துக்குடி பழச்சாறு .சாத்துகுடியில் வைட்டமின் C உயிர்ச்சத்தும், இரும்புச்சத்தும்,சுண்ணாம்புச்சத்தும் காணப்படுகின்றன.

                 மேலும்,இதில் புரதம்,கால்சியம்,நார்சத்து அதிகம் உள்ளது. சாத்துக்குடிப் பழச்சாற்றில் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. இத்தனை சத்துக்களைஉள்ளடக்கிய இந்த சாத்துகுடி விலை குறைவாகவும் அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடியது. இந்த சாத்துக்குடி பழச்சாறை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Sathukudi, sathukudi benefits in tamil, sathukudi juice benefits in tamil, mosambi juice meaning in tamil, sathukudi juice in tamil, sathukudi benefits, சாத்துக்குடி, சாத்துக்குடி பயன்கள், சாத்துக்குடி பழச்சாறு, சாத்துக்குடி பழச்சாறு பயன்கள்,

Contents

சாத்துக்குடியின் நன்மைகள்

  • எலும்பு வளர்ச்சி அடையும்
  • பசியைத் தூண்டும்
  • நினைவாற்றலை அதிகரிக்கும்
  • நோயாளிகளுக்கு ஏற்றது
  • சோர்வைப் போக்கும்
  • இரைப்பைக்கோளறுகள் நீக்கும்
  • அடிநா சதை அழற்சி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்
  • எடையைக் குறைக்கும்
  • இரத்தத்தைச் சுத்தம் செய்யும்
  • ஆஸ்துமா குணமடையும்
  • சளியைப் போக்கும்
  • ஸ்கர்வி நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்
  • ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்
  • தொண்டை புண் அடிக்கடி ஏற்படுவது குறையும்
  • வாய் துர்நாற்றம் நீங்கும்
  • உடலில் நீர்ச் சத்து அதிகரிக்கும்

சாத்துக்குடிப் பழச்சாற்றினால் கூந்தலுக்கு ஏற்படும் நன்மைகள்

  • சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப் பெறமுடியும்
  • தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும்
  • நரைமுடியைப் போக்கும்
  • கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.