நம் முன்னோர்கள் ஒரு கால கணிப்பு மேதைகள்தான். அவர்கள் சொல்லியிருக்கும் அனேக மருத்துவ விதிகளின் சூட்சமங்களை அவ்வப்போது நாம் உணரும்போது மேலே சொன்ன அந்த வாக்கியத்தை அனைவரும் ஒருமுறையேனும் நினைத்திருப்போம். அந்த மாதிரி ஒரு மருத்துவ சூட்சமம்தான் குங்குமப்பூ -விலும் இருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, பிள்ளையாரிடம் தோப்புக்கரணம் போடுவது பக்திக்காக அல்ல, அது ஒரு நல்ல உடற்பயிற்சி என்று. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் என்பதால்தான் நமது முன்னோர்கள் பக்தியுடன் தோப்புகரணத்தை இணைத்து விட்டனர். அப்பொழுதுதான் நம் பின்னால் வரும் தலைமுறையினர் இதை செய்வார்கள் என்பது நம் முன்னோர்களின் கணக்கு.
கர்ப்பிணிகள் குங்குமபூ எடுத்துக்கொண்டால் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை நன்கு சிவப்பு நிறத்தில் பிறக்கும் என்று அனைத்து தாய்மார்களும் தங்கத்தின் விலையில் கிடைக்கும் குங்குமப்பூவை வாங்கி உண்ணுகின்றனர்.
ஆனால் குங்குமப்பூவை உண்பதால் குழந்தையின் நிறத்தை ஒரு துளி அளவுகூட மாற்ற முடியாது. அங்கேதான் நம் முன்னோர்களின் திருவிளையாடல் உள்ளது.
- குங்குமப்பூ பெண்களின் கற்பபைக்கு நல்ல இரத்த ஓட்டத்தை கொடுக்கசெய்து பலப்படுத்துகிறதுறது.
- வயிற்று பிடிப்புகள், வாயு பிரச்சினைகள் போன்றவைகள் நீங்க குங்குமப்பூவை பாலுடன் குடிக்கலாம்.
- குங்குமப்பூ நுரையீரலில் உள்ள திசு வீக்கங்களை குறைத்து இரத்த குழாய்களையும் சுத்தப்படுத்தி ஆக்சிஜன் நன்கு கிடைக்க வழிவகை செய்கிறது.
- மேலும் செரிமான பிரச்சினைகளை நீக்கி ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
இந்த காரணங்களுக்காகத்தான் கர்ப்பிணிகளை குங்குமப்பூ எடுத்துக்கொள்ள முன்னோர்களால் சொல்லப்பட்டது. ஆனால் இந்த விளக்கங்களை சொன்னால் நீங்க கேப்பிங்களா? அதான் கலர்ல வச்சான் சூட்சமத்த!!!
பல ஆயிரங்கள் கொடுத்து குங்குமப்பூவை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிகள் இப்பொழுது சொல்வது, அடப்பாவிங்களா! இதுக்குத்தான் குங்குமப்பூவை கர்ப்பிணிகள் சாப்பிடனும்னு சொல்லிருக்காங்களா???
இந்த தகவல் உங்களுக்கு பயன்பெறா விட்டாலும் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்படலாம். எனவே சமூக வலைதளங்களில் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.