குருப்பெயர்ச்சி 2018 – 2019
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் யாருக்கு நடக்கும்
பலன்கள் யாருக்கு நடக்காது
குருப்பெயர்ச்சி பலன்கள்
ரிஷபம் ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் மறைந்திருந்த குருபகவான் தற்போது ஏழாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்வையிட்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களையும், தன லாபங்களையும் அளிக்கப் போகிறார். இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மேன்மைகளைத் தரும் ஒன்றாக இருக்கும்
குரு நிற்க போவது – ஏழாமிடத்தில் – (விருச்சிகம்)
குருவின் ஐந்தாம் பார்வை – பதினோராமிடம் – (மீனம்)
குருவின் ஏழாம் பார்வை – ராசியில் (முதலிடம்) – (ரிஷபம்)
குருவின் ஒன்பதாம் பார்வை – மூன்றாமிடம் – (கடகம்)
ஆறாமிடத்தில் இருந்து வந்த குருவால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன. தற்போது ஏழாமிடத்திற்கு மாறும் குருபகவான் உங்கள் ராசியை பார்த்து உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தையும் உன்னதமாகுவார் என்பது ஜோதிட விதி.
இயற்கைச் சுபக் கிரகமும் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் அள்ளித் தருபவருமான குருபகவான் இம்முறை உங்கள் ராசியை பார்க்கப் போவதால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் எதுவும் இனிமேல் உங்களிடம் இருக்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.
குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.
குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
- வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
- திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)
குருவின் பார்வையானது, ரிஷபம் ராசியினருக்கு பதினொன்று, ராசியில் (ஒன்று), மூன்று, ஆகிய இடங்களில் விழுகிறது.
குருபகவானின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.
இதுவரை நஷ்டத்தைத் தந்த பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.
விடாமுயற்சி மற்றும் புகழுக்குரிய ஸ்தானமான மூன்றாமிடத்தை குரு பகவான் பார்ப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.
சகாயஸ்தானம் எனப்படும் மூன்றாமிடம் வலுப்பெறுவதால் அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள். மூன்றாமிடம் கழுத்து ஆபரணத்தை குறிப்பதால் ஒரு சிலர் மதிப்பு மிக்க நகை வாங்கி மனைவிக்கு பரிசளிப்பீர்கள்.
ஆகையால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்புமுனையான குருப் பெயர்ச்சியாக இது அமையும் என்பதால் இனி அனைத்தும் உங்களுக்கு சுகம்தான்.
யாருக்கு பலன்கள் நடக்கும்?
இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், ரிஷபம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.
ரிஷபம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.
பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
(அவரவர் சுய ஜாதகத்தில்)
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
- சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
- சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்
- விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
- ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
ஆனால் ரிஷபத்தை குரு தனது சமசப்தம பார்வையால் பார்ப்பதால், பகை தன்மையையும் தாண்டி, பலன்கள் சுபமாகவே நடக்கும்.
- கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.
யாருக்கு பலன்கள் நடக்காது?
- உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
- உங்கள் ராசி மேல் குரு பார்வை விழுவதால், நிச்சயமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யாமல் போகாது (மற்ற இடங்களான விருச்சிகம், மீனம், கடகம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போதும்)
இறைவழிபாடு
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை
ரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை
மிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை
கடகத்தில் குரு – திங்கட்கிழமை
சிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை
தனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை
மகரம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை
வழிப்பாட்டு ஸ்தலங்கள்
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)
*********************************
ரிஷபம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
https://youtu.be/wRkS-lbRyGs
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர்
ஜோதிட ஆச்சார்யா
பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN
(M.M.சந்திர சேகரன்)
89730-66642, 70102-92553
(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************