REMOTE CONTROL FOR CEILING FAN AND LIGHT
இந்த ஸ்மார்ட் உலகத்தில் எல்லாமே ரிமோட் தான். டிவி யில் இருந்து வாஷிங் மெசின் வரைக்கும் இந்த ரிமோட் இல்லாத கருவிகளே இல்லை எனலாம். ஆனால் இன்னும் பல வீடுகளில் FAN மற்றும் LIGHT க்கு மட்டும் இன்னும் இந்த ரிமோட் பரவலாக சென்றடையவில்லை. ஏனென்றால் தனித்தனியாக FAN மற்றும் LIGHT கள் வாங்க வேண்டுமென்றால் அதிக தொகை செலவழிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு CEILING FAN REMOTE உடன் வாங்க 4000 ரூபாயாவது தேவைப்படும். அனால் நாம் இப்பொழுது பார்க்க போகும் கருவியில் 4 LIGHT மற்றும் 1 FAN -ஐ ரிமோட்டுடன் இணைத்து இயக்க வெறும் 900 ரூபாய்தான் ஆகும்.
BlackT Electrotech Remote Switch for Fan and Light
இந்த கருவியை நம் வீட்டில் எந்தை அறையில் தேவைபடுகிறதோ அங்கு உள்ள Switchboard -ல் இணைப்பதன் மூலம் 4 Light மற்றும் 1 Fan ஆகியவைகளை Remote Control மூலம் இயக்கலாம்.
இந்த கருவியை Switchboard உடன் இணைப்பது மிகவும் எளிது. ஆனால் உங்களுக்கு சிறிதும் சந்தேகம் இருந்தாலும் எலக்ட்ரீஷியனை கூப்பிட்டு இணைத்து கொள்ளுங்கள்.
இணைக்கும் முறை
முதலில் நீங்கள் இணைக்கபோகும் Switchboard -ற்கு வரும் மின் இணைப்பை துண்டியுங்கள். ஒரு Tester வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி உங்களுக்கு தேவையான லைட் மற்றும் ஒரு Fan -ஐ இணைக்கலாம்.
கருப்பு மற்றும் சிவப்பு நிற ஒயர்களை இந்த கருவிக்கான மெயின், எர்த்தில் இணைக்க வேண்டும்.
கருவியில் இருந்து வரும் மஞ்சள் நிற ஒயர்களை உங்களுக்கு தேவையான லைட்களுடன் படத்தில் காட்டயுள்ள படி சுவிட்ச்சின் மேற்புறத்தில் இணைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இணைக்கின்ற Switchboard -ல் 4 லைட்கள் இல்லையென்றால் மீதமுள்ள 2 ஒயர்களை போர்டுக்குள்ளே எந்த இணைப்பும் இல்லாமல் வைத்துவிடுங்கள்.
அடுத்து கருவியில் இருந்து வரும் நீல நிற ஒயரை படத்தில் காட்டியுள்ளபடி ரெகுலேட்டரிலிருந்து வந்து சுவிட்ச்சில் இணையும் இடத்தில் இணைக்கவேண்டும்.
இப்பொழுது ரிமோட்டின் மூலம் லைட் மற்றும் Fan -ஐ இயக்கலாம்.
இந்த BlackT Electrotech remote ceiling fan light கருவி உங்களுக்கு தேவையெனில் வாங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள்
இந்த கருவி பற்றிய வீடியோ