உருளைக்கிழங்கு
ஆம். நாம் இளக்காரமாக நினைக்கும் பல பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கும். நாம்தான் அதை கண்டுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது.
உருளைக்கிழங்கின் முக்கிய பயன்கள்
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கூழ் போல ஆக்கிக்கொண்டு அதை, நம் உடலின் கழுத்து, தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள கருமை நிற பகுதிகளில் பற்று போட்டு வந்தால் கருமை மறைத்து உடலின் இயற்கையான நிறம் தோன்றும்.
மேலும் இந்த கூழை தீப்புண், பரு வடு, காயம் பட்ட தழும்புகள் ஆகியவறில் பற்று போட்டால் அனைத்தும் மறைந்து விடும். தீப்புண் ஆறுவதுடன் அதன்பின் வரும் தழும்புகளும் தோன்றாது.
இப்பொழுது பெரும்பாலான மக்கள் சரியான நேரத்திற்கு சாப்பிதுவதில்லை. எனவே எளிதாக அமில சுரப்பு நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதாவது அசிடிட்டி. இந்த பிரச்சினை உள்ளவர்கள் உருளைக்கிழங்கை சாறு பிழிந்து 2 தேக்கரண்டியளவு ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் அரை மணி நேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்டால் அசிடிட்டி – னா என்ன? அப்டின்னு கேட்பிங்கோ.
அடுத்து உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து தோலுடன் அரைத்து சாறு எடுத்து தினமும் காலை மாலை இருநேரமும் முகம் கழுவிவர உங்கள் முகம் பளிச்.
இந்த பலன்களை எல்லாம் ஒரே நாளில் எதிர் பார்க்க முடியாது. ஏனென்றால் உருளைக்கிழங்கில் ஆயில்மென்ட், லோசன், Fairness creams போன்றவற்றில் உள்ளது போல இரசாயனங்கள் இல்லை. எனவே நமது பாரம்பரிய இயற்கை மருத்துவங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது பொறுமையாக பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் முடிவில் நிலையான மாற்றத்தை நீங்கள் பெற முடியும். நன்றி.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] முகம் பொலிவு பெரும் […]