Contents
புதிய வாக்காளர் பட்டியல்
புதிய வாக்காளர் பட்டியல் 2018 -க்கான, திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்களது பெயர் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இருக்கிறதா? அதை எப்படி எளிமையாக தெரிந்துகொள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவேளை உங்களது பெயர் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் இந்த புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் தற்போது பெயர் சேர்ப்பதற்கான முகாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கே சென்று உங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து விடுங்கள். அதில் உங்கள் மாவட்டம் மற்றும் உங்களின் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்து சமர்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் Verification நம்பரை டைப் செய்து சமர்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்கள் ஏரியாவின் வாக்காளர் பட்டியல் PDF -ல் டவுன்லோடு ஆகும். அதில் உங்கள் பெயர் மற்றும் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
நமது பெயரை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
இந்த பட்டியலில் எக்கச்சக்க பெயர்கள் உள்ளதால் நமது பெயரை கண்டுபிடிக்க மிகவும் சிரமமாகஇருக்கும்.நமது பெயரை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
இதற்கு உங்களின் பாகம் எண் (PORT NUMBER), வரிசை எண் (SERIAL NUMBER) தெரிந்திருக்க வேண்டும்.
இதை எப்படி தெரிந்து கொள்ளவது என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
வாக்களர் அட்டையின் பாகம் எண், வரிசை எண் அறிய கிளிக் செய்யுங்கள்
நீங்கள் டவுன்லோடு செய்த வாக்காளர் பட்டியலில் இந்த இடத்தில் பாகம் எண் என்று இருக்கும்.
அடுத்து இந்த இடத்தில் இருப்பது வரிசை எண் ஆகும்.
இதே மாதிரி உங்களின் பாகம் எண் வரிசை எண்ணை வைத்து எளிதாக உங்கள் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்
வாக்காளர் அட்டை பற்றிய பயனுள்ள வீடியோக்கள்
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
Super
மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன நன்றி
Supar
Good.