முளைகட்டிய தானியங்கள்
பொதுவாக தானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று அனைவரும் அறிந்ததே. இந்த தானியங்களை முளைகட்டிய தானியங்கள் -ஆக மாற்றினால்அந்த சத்துக்கள் அப்படியே 200% -மாக உயரும். ஆனால் இதற்காக யாரும் மெனக்கெடுவது இல்லை. உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமே இதை முயற்சி செய்து பலன் பெறுகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது இந்த முளைகட்டிய தானியங்களில்?
முளைக்கட்டிய தானியங்களை உருவாக்கும் முறை
தானியங்களை நன்றாக கழுவி நன்கு ஊற வைத்து பின்பு அவற்றில் உள்ள தண்ணீரை வடித்து பின்பு ஈரமான துணியில் போட்டு கட்டி வைக்க வேண்டும்.அவை 10 மணிநேரம் கழித்து எடுத்தால் முளை விட்டுக்காணப்படும்.
முளைக்கட்டிய தானியங்களின் வகைகள்
- பச்சைப்பயிறு
- கொண்டக்கடலை
- வெந்தயம்
- எள்ளு
- வேர்க்கடலை
- சூரிய காந்தி விதை
- வெள்ளரி விதை
- கொள்ளு
- கருப்பு உளுந்து
முளைக்கட்டிய தானியங்களில் காணப்படும் சத்துக்கள்
- கால்சியம்
- இரும்புசத்து
- சோடியம்
- புரதம்
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- வைட்டமின் எ,பி1,பி2.
முளைக்கட்டிய தானியங்களை உட்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள்
- முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதனால் அவற்றில் காணப்படும் சத்துக்கள் நேரடியாக உடலுக்குக் கிடைக்கின்றன.
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
- விளையாட்டு வீரர்களுக்கு உடல் வலிமையையும்,விளையாடுவதற்கு தேவையான சக்தியை தருபவை.
- புற்றுநோயை குறைக்கக்கூடியவை.
- நல்ல கண் பார்வைக்கிடைக்கும்.
- உடல் எடை குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் இவற்றை எடுத்துக்கொண்டால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
- அதிக தாய்பால் சுரக்கும்.
- உடலில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும்
- மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும்.
- எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த உணவு.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.