Contents
- 1 குருப்பெயர்ச்சி 2018 – 2019
- 2 மகரம்
- 2.1 மகரம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
- 2.2 பலன்கள் யாருக்கு நடக்கும்
- 2.3 பலன்கள் யாருக்கு நடக்காது
- 2.4 குருப்பெயர்ச்சி பலன்கள்
- 2.5 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
- 2.6 யாருக்கு பலன்கள் நடக்கும்?
- 2.7 பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
- 2.8 பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- 2.9 யாருக்கு பலன்கள் நடக்காது?
- 2.10 இறைவழிபாடு
- 2.11 வழிப்பாட்டு ஸ்தலங்கள்
குருப்பெயர்ச்சி 2018 – 2019
மகரம்
மகரம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் யாருக்கு நடக்கும்
பலன்கள் யாருக்கு நடக்காது
குருப்பெயர்ச்சி பலன்கள்
மகரம் ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாறி நல்ல பலன்களைத் தர இருக்கிறார்
குரு நிற்க போவது – பதினொராமிடம் – (விருச்சிகம்)
குருவின் ஐந்தாம் பார்வை – மூன்றாமிடம் – (மீனம்)
குருவின் ஏழாம் பார்வை – ஐந்தாமிடம் – (ரிசபம்)
குருவின் ஒன்பதாம் பார்வை – ஏழாமிடம் – (கடகம்)
இதுவரை குருபகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தார். இந்த அமைப்பினால் பெரும்பாலோருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும், தொழில்துறை உயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலம் இந்த நிலைமை மாறி தொழில் அமைப்புகளில் இனிமேல் சாதகமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும். எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித் துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் இந்தக் குருப்பெயர்ச்சியினால் நல்ல பலன்களை அடைவார்கள்.
காண்ட்ராக்டர்கள், நிர்வாகப் பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நீர் சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும்.
எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் கிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.
சுயதொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.
குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
- வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
- திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)
குருவின் சுப பார்வையானது, மகரம் ராசியினருக்கு மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
குருபகவானின் மூன்றாமிடப் பார்வையால் எதையும் சமாளிக்கும் மனதைரியம் வரும். உண்மையில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு.
தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். சகோதர வழியில் உங்களுக்கும் உதவிகளும், நன்மைகளும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.
பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் இருக்கிறது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம் பெண்களுக்கு தாலி பாக்கியமும், திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.
கீர்த்தி ஸ்தானம் சுபத்துவம் பெறுவதால் மகர ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். ஜோதிடத்தில் மூன்றாமிடம் பிரபலமடைவதைக் குறிக்கும் என்பதால் நவீன யுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் தனுசு ராசிக்காரர்களால் சாதிக்க முடியும்.
கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள்.
குருபகவான் தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.
குருபகவான் தனது பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய சந்தர்ப்பம் வரும்.
யாருக்கு பலன்கள் நடக்கும்?
இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், மகரம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.
மகரம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.
பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
(அவரவர் சுய ஜாதகத்தில்)
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
- சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
- சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்
- விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
- ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
- கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.
யாருக்கு பலன்கள் நடக்காது?
- உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
இறைவழிபாடு
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை
ரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை
மிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை
கடகத்தில் குரு – திங்கட்கிழமை
சிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை
தனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை
மகரம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை
வழிப்பாட்டு ஸ்தலங்கள்
-
திருச்செந்தூர் முருகன் கோயில்
-
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)
*********************************
மகரம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர்
ஜோதிட ஆச்சார்யா
பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN
(M.M.சந்திர சேகரன்)
89730-66642, 70102-92553
(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
*********************************