Contents
இரயில் பயணம்
இப்பொழுது பஸ் -ல் பயணம் செய்வதில் கால் பங்கு செலவே இரயிலில் பயணம் செய்ய ஆகிறது. எனவேதான் எப்பொழுது பார்த்தாலும் அனைத்து இரயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதை பார்க்கிறோம்.
IRCTC என்ற ஆப் மூலியமாக நாம் வீட்டிலிருந்தே எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்
அதோடு பாசஞ்சர் டிக்கெட்டுகள் மற்றும் முபதிவில்லா டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் இவைகளை வாங்குவதற்கு எப்பொழுது பார்த்தாலும் இரயில் நிலையங்களில் வரிசை கட்டுக்கடங்காமல்தான் நிற்கும்.
UTS APP
இதற்காத்தான் இந்திய இரயில்வே UTS என்ற ஆன்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தயுள்ளது. இந்த ஆப் மூலமாக நாம் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் தவிர அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி கொள்ளலாம்.
UTS APP லிங்க்
[wp_ad_camp_3]
https://play.google.com/store/apps/details?id=com.cris.utsmobile&hl=en_IN
[wp_ad_camp_3]
இந்த ஆப் -ல் இரண்டு முறைகளில் இரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
- நாம் புக் செய்யும் டிக்கெட்டுகளுக்கு பிரிண்ட் தேவை இல்லை.
- டிக்கெட்டுகளுக்கு பிரிண்ட் தேவைப்படும் முறை
பிரிண்ட் தேவையில்லை
இம்முறையில் நீங்கள் டிக்கெட் வாங்கவது நல்ல பயனுள்ள வசதியாகும். ஏனென்றால் இம்முறையில் நாம் வாங்கும் டிக்கெட்டுகளை நம் மொபைலில் காட்டினாலே போதும் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் நாம் இந்த முறையில் டிக்கெட் வாங்கும்போது எந்த இரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்ய வேண்டுமோ அந்த நிலையத்திலிருந்து 25 அடி தொலைவிற்குள் இருந்துதான் புக் செய்ய முடியும்.
பிரிண்ட் தேவை
இந்த முறையில் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் எந்த இரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்ய வேண்டுமோ அந்த நிலையத்திலோ, அல்லது ATVM/CoTVM இயந்திரங்களின் மூலமாகவோ டிக்கெட்டுகளை பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த முறையில் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.
UTS APP -ன் பயன்கள்
UTS ஆப் மூலமாக எந்த ஒரு இரயில் நிலையத்திற்கும் பிளாட்பாரம் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பாசஞ்சர் டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை எளிதாக புக் செய்யலாம்.
மேலும் இந்த ஆப் – ல் இந்திய இரயில்வேயின் R WALLET -ன் வழியாகவும், நெட் பாங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு போன்றவற்றின் வழியாகவும் பணம் செலுத்த முடியும்.
இந்த வழிமுறைகளுக்கான தெளிவான வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] […]