Lic Payment Online
Lic என்பது இன்றைய கால கட்டத்தில் 100 க்கு 99 சதவிகித மக்களுடன் கலந்து விட்ட ஒரு விஷயம். சேமிப்புக்காகவும், வருமான வரி கணக்குக்காகவும் அதிக மக்கள் Lic காப்பீடுகளை எடுத்து வருகின்றனர்.
ஆக நாம் எடுக்கும் Lic பாலிசி தவணைகளை மாதம் ஒருமுறையோ, 3 மாதங்களுக்கு ஒருமுறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ கட்டிக்கொண்டிருப்போம்.
அந்த தவணை தொகைகளை கட்டுவதற்கு ஒரு சிலருக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். நாம் நமது Lic Agent வசம் கொடுத்து கட்டிவருவோம். ஆனால் ஒருசில Agent -கள் சரியான நேரத்திற்கு வந்து தவணை தொகைகளை பெற்றுகொள்வதில்லை என்ற புகார் கூறுவதுண்டு.
அவர்கள் வரும் நேரத்தில் நம்மிடம் பணம் இருப்பதில்லை. நாமும் நேரடியாக சென்று Lic அலுவலகத்திற்கு சென்று கட்டுவதிலும் சிரமம்.
Lic payment app official
எனவே நமது Lic payment -ஐ நமது மொபைலில் இருந்தே எப்படி எளிதாக கட்டலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Lic payment மொபைலில் இருந்து செலுத்துவதற்காக Pay direct என்ற செயலியை lic நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து Lic payment app -ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.lic.licpaydirect&hl=en_IN
Lic Payment App ஐ ஓபன் செய்தால் வரும் இந்த பக்கத்தில் Please select என்பதை கிளிக் செய்து அதில் Renewal Payment என்பதை கிளிக் செய்து Done என்பதை கிளிக் செய்தால் வரும் அடுத்த பக்கத்தில் Proceed என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் Lic பாலிசி நம்பர், Gst வரி சேர்க்காத தவணை தொகை, உங்கள் Lic யில் பதிவு செய்யப்பட பிறந்த தேதி, இமெயில், மொபைல் எண் ஆகியவற்றை டைப் செய்து பின் Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் வரும் பக்கத்தில் மேலும் எதாவது பாலிசிகளை இணைக்க விரும்பினால் அந்த பாலிசி எண் மற்றும் தவணை தொகை ஆகியவற்றை டைப் செய்து ஒரே தொகையாக செலுத்தலாம்.
அதற்கு கீழே நீங்கள் டைப் செய்த Lic பாலிசி எண், உங்கள் தவணை தொகைக்கு வரி இருந்தால் தவணை தொகையுடன் சேர்ந்த மொத்தத் தொகை ஆகியவைகள் வரும் ஒருமுறைசரி பார்த்து பின் Proceed என்பதை அழுத்துங்கள்.
பிவரும் பக்கத்தில் எல்லாவற்றையும் திரும்பவும் சரிபார்த்துவிட்டு Check & Pay என்பதை கிளிக் பண்ணுங்கள்.
அடுத்து நீங்கள் Credit card, Debit card, Internet banking, E wallets மூலமாக பணம் செலுத்த வேண்டும் என்றால் இந்த Billdesk payment gateway -ஐ கிளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் எந்த வழியில் பணம் செலுத்த போகிறீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் கிரெடிட்கார்டு வழியாக செலுத்தப்போகும் தொகைக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும். அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இதை சரிபார்த்த பின்னர் Make Payment என்பதை கிளிக் செய்து உங்கள் தொகையை செலுத்தலாம்.
இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.