கருப்பு அரிசி அல்லது கவுனி அரிசி
ஆம் நண்பர்களே. நமது நாட்டின் மன்னர்கள் ஆட்சியில் அரசர்கள் மற்றும் அரசிகள் சாப்பிடும் அரிசி என்று பெயர் பெற்ற கருப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி பயன்கள் பற்றி நமக்கு தெரியுமா?
ஆனால் சீனா வில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த அரிசியின் மகத்துவம் பற்றி தெரிந்ததனால் உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவில் இந்த அரிசியை பயிரிட்டு வருகின்றனர்.
பண்டைய காலத்தில் சீனாவில் இந்த கவுனி அரிசியை அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சட்டமே இருந்ததாம். வாரத்தில் 2 முறை இந்த கருப்பு அரிசியை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதனால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் அபரிவிதம்.
கருப்பு அரிசி அல்லது கவுனி அரிசியின் பயன்கள்
- புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம்.
- இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும்.
- இந்த கருப்பு அரிசி -யில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை, மற்றும் இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது.
- மேலும் கருப்பு அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- கருப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
- அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.
- இந்த கருப்பு அரிசியில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும். செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கருப்பு அரிசி பொங்கல் இருக்கும்.
குறிப்பு:
இந்த அரிசி வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே இதை சமைப்பதற்கு முன்னால் குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைத்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி
[…] நம் தளத்தில் ஏற்கனவே இந்த வரிசையில் கவுணி அரிசி பற்றி பார்த்துள்ளோம். அதேபோல பல […]