நித்திய கல்யாணி இந்த மலரின் பெயர். தமிழ் மருத்துவத்தில் சர்க்கரை நோய், சிறுநீர் சம்ப்பந்தமான நோய்கள், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தரும் மருந்துகளில் கண்டிப்பாக இந்த நித்திய கல்யாணி மலர் இடம் பெற்றிருக்கும்.
இந்த மலரை காணாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இதுதான் நித்திய கல்யாணி மலர், இதில் இவ்வளவு மகத்துவம் உள்ளது என்று அதிகம் பேர் தெரியாமலேயே இருக்கின்றனர். ஏனென்றால் இது பெரும்பாலும் கல்லறை மற்றும் சுடுகாட்டில் பரவலாக காணப்படும். அதனாலேயே இதற்கு சுடுகாட்டு மலர், கல்லறை மலர், என்ற பெயர்களும் உண்டு. ஒரு செடி வைத்தாலே போதும் அதன் மலர் பூத்து கீழே விழுந்து தானாக முளைக்க தொடங்கும். இந்த மலரை பற்றிய ஆய்வு சென்னை கிறிஸ்து கல்லூரியிலும், அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறதாம்.
இந்த மலரின் மருத்துவ பயன்கள்
- சர்க்கரை நோயை கட்டு படுத்துவதே இந்த மலரின் முக்கிய மருத்துவ பலனாகும்.
- இரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது
- அதிகளவில் சிறுநீர் வெளியேறும் பிரச்சினை
- நன்கு சாப்பிட்ட பிறகும் அதிக பசி
- பசியே இல்லாமை
- அதிக படபடப்பு உள்ளவர்களின் நாடியை சமநிலைக்கு கொண்டு வருகிறது
- ஓரு சிலருக்கு எப்போதுமே அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சோர்வை போக்குகிறது
- இந்த மலரிலிருந்து எடுக்கப்படும் வின்க்ரிஷ்டின், வின்ப்ளாஷ்டின் என்ற பொருட்கள் புற்று நோக்கான மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது
- மன நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளிலும் இந்த மலர் பயன்படுகிறது
- பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் இந்த மலர் மருந்தாகிறது
சாப்பிடும் முறை
- இந்த மலரை காலை 1-ம் மாலை 1 -ம் அப்படியே சாப்பிடலாம்.
- 5 அல்லது 6 மலருடன் இரண்டு டம்பளர் நீர் விட்டு ஒரு டம்பளராக வரும் வரை நன்கு காய்ச்சுங்கள். ஆறிய பின் அதை ஒரு நாளைக்கு நான்கு முறை பிரித்து பருகலாம்.
- இந்த தாவரத்தின் வேரை எடுத்து நிலகாய்ச்சலில் காய வைத்து பவுடர் செய்து அதை கால் தேக்கரண்டி வீதம் நாளைக்கு மூன்று முறை பருகி வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.