வாக்காளர் அட்டை பாகம் எண்,வரிசை எண் தெரிந்து கொள்வது எப்படி
நமது வாக்காளர் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, பாலினம், அப்பா பெயர், உறவு முறை, வாக்காளர் அட்டை எண் போன்ற விவரங்களை ஆன்லைனில் திருத்துவதற்கு வாக்காளர் அட்டை பாகம் எண்,வரிசை எண் தேவை (voter id part number and serial number). அதை எப்படி கண்டுபிடிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
STEP 1
இந்த லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்கள் வாக்காளர் அட்டை எண்ணையும், உங்கள் மாவட்டத்தையும், சரிபார்ப்பு எண்ணையும் டைப் செய்யுங்கள். அடுத்து SUBMIT -ஐ கிளிக் செய்யுங்கள்.
இதில் குறித்து காட்டப்பட்டுள்ள இடத்தில உங்கள் வாக்காளர் அட்டையின் பாகம் எண், வரிசை எண் ( VOTER ID PART AND SERIAL NUMBER) இருக்கும்.
SMS வழியாக தெரிந்துகொள்ள
உங்கள் மொபைலில் இருந்து 1950 என்ற எண்ணிற்கு உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பினால் உங்கள் வாக்காளர் அட்டை விவரங்கள், வாக்கு சாவடி போன்ற அனைத்து விவரங்களும் SMS -ல் வரும். அதில் இந்த பாகம் எண்ணும் வரிசை எண்ணும் இருக்கும்
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவரும் பயன்பெற கீழ்காணும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] உங்களின் பாகம் எண் (PORT NUMBER), வரிசை எண் (SERIAL NUMBER) தெரிந்திருக்க […]
[…] உங்கள் வாக்காளர் அட்டையின் வரிசை எ… […]