Contents
பழைய மாத்திரைகள்
அனைவரது வீட்டிலும் பழைய மாத்திரைகள் கண்டிப்பாக இருக்கும். நோய்க்காக வாங்கி சாப்பிட்டு நோய் தீர்ந்ததும் சாப்பிடாமல் மீதமிருக்கும் மாத்திரைகளை நாம் எப்பொழுதுமே தூக்கிப்போடுவதில்லை. சிறிது காலம் சென்றதும் அவை எதற்கு வாங்கினோம் என்று தெரியாமல் எல்லா மாத்திரிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்திருப்போம்.
இப்படி நாம் சேர்த்து வைத்திருக்கும் மாத்திரைகளின் காலாவதி ஆகும் தேதி வெகு நாட்கள் இருப்பின் நாம் திரும்பவும் நோய் தாக்குதலுக்கு உட்படும்போது அவசரத்திற்கு நாம் சேர்த்து வைத்திருக்கும் மாத்திரைகளில் தேடுவதுண்டு. அப்பொழுதுதான் அந்த மாத்திரைகள் எந்த நோயக்கானது என்று தடுமாறும் சூழ்நிலை வரும்.
இதை கண்டுபிடிக்க ஓரு அருமையான வழி இருக்கிறது. TABLET WISE என்ற வெப்சைட்டிற்கு சென்று அதில் உங்களிடம் உள்ள மாத்திரைகளின் பெயரை டைப் செய்தாலே, இந்த மாத்திரை எந்த நோய்க்கானது, இந்த மாத்திரையினால் எந்த மாதிரியான பக்க விளைவுகள் வரலாம் போன்ற அனைத்து விவரங்களும் வரும். எனவே இந்த வழிமுறை நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
[wp_ad_camp_3]
https://www.tabletwise.com/ta/menabol-tablet/uses-benefits-working
இந்த லிங்கை கிளிக் செய்து இந்த வெப்சைட்டிற்குள் செல்லுங்கள். இந்த வெப்சைட்டில் மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் தேடும் தகவல்கள் தமிழிலும் கிடைக்கும்.
இந்த இடத்தில் உங்கள் கையில் உள்ள மாத்திரையின் பெயரை டைப் செய்து கீழே வரும் மாத்திரையின் அளவையும் சரியாக தெரிவு செய்யுங்கள்.
இப்பொழுது அந்த மாத்திரையின் மூலக்கூறுகள், பயன்கள், பக்கவிளைவுகள் ஆகிய முழு விவரங்களுமே வந்து விடும். இதை வைத்து இந்த மாத்திரையை நீங்கள் எதற்கு வாங்கினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மருத்துவர்களிடமோ அல்லது நீங்களே மருந்து கடைகளிலோ வாங்கும் மாத்திரைகளை இந்த வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம்.
குறிப்பு
எப்பொழுது மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் மாத்திரைகளின் அட்டையில் அதன் பெயர் தெரியும்படி கிழித்து பயன்படுத்துங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.