Contents
ஆன்ராய்டு போன்
இன்று அனைவர் கையில் ரேகை உள்ளதோ இல்லையோ ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிக விலை கொடுத்து அதிக வசதிகள் உள்ள ஸ்மார்ட் போன் வாங்குவது இன்று அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்- களில் SAFE MODE என்றால் என்ன ? அது எதற்கு பயன்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக விலை கொடுத்து வாங்கும் ஸ்மார்ட் போன்- கள் சில மாதங்கள் கழித்து ஹேங் ஆவது, அப்ளிகேஷன் -கள் முறையாக வேலை செய்யாமல் STOP UNFORTUNATELY என்று வருவது, வைரஸ் பிரச்சினை போன்றவைகள் வருவது சாதரணமாகிவிட்டது.
இந்த மாதிரி பிரச்சினைகள் வந்ததும் அனைவரும் ANTI VIRUS, RAM CLEANER, CACHES CLEANER, MEMORY BOOSTER போன்ற அப்ளிகேஷன்- களை இன்ஸ்டால் செய்து அந்த மொபைலை மேலும் ஹேங் ஆக்குகிறார்கள்.
அல்லது RESTORE செய்து விடுவார்கள். RESTORE செய்வதால் நம் மொபைலில் உள்ள தேவையற்ற பைல்-கள் நீக்கப்பட்டு நமது மொபைல் வாங்கியபோது இருந்ததை போல வேகமாக இயங்கும்.
ஆனால் இதை அடிக்கடி செய்தால் நமக்கு நேரமும் இன்டர்நெட் டேட்டா வும் அதிகம் செலவாகும். ஏனென்றால் ஒரு முறை RESTORE செய்த பிறகு மொபைலில் உள்ள CONTACTS, SMS, PHOTOS, APPS இவை அனைத்தும் BACKUP எடுத்து மறுபடியும் RESTORE செய்ய வேண்டும்.
ஆனால் ஆன்ராய்டு நிறுவனம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்ய அந்தந்த மொபைல்களிலேயே வழியை கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் SAFE MODE.
SAFE MODE
இந்த SAFE MODE க்கு நமது மொபைலை மாற்றுவதனால் வைரஸ், ஹேங், அப்ளிகேஷன் UNFORTUNATELY STOPPED போன்ற பிரச்சினைகள் சரி ஆகிவிடும். இந்த SAFE MODE -ஐ வாரம் ஒருமுறை 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும் இந்த பிரச்சினைகளிலிருந்து நமது மொபைலை பாதுகாக்கலாம்.
ஆனால் இந்த இந்த SAFE MODE -ல் நமது மொபைல் இருக்கும்போது நாம் மொபைல் வாங்கும்போது இருந்த அப்ளிக்கேஷன்- கள் மட்டும்தான் வேலை செய்யும். நாமாக இன்ஸ்டால் செய்த அப்ளிக்கேஷன் எதுவும் இந்த MODE – ல் இயங்காது.
SAFE MODE வைக்கும் முறை
உங்கள் மொபைலில் பவர் பட்டனை அழுத்தி பிடித்தால் இந்த மாதிரி ஸ்கிரீன் வரும். இது அனைத்து மொபைல்- களுக்கும் பொதுவானது.
இதில் இந்த POWER OFF என்பதை அழுத்தி பிடித்தால் அடுத்து SAFE MODE குள் செல்லலாமா என்று கேட்கும். OK ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் மொபைல் SAFE MODE ல் இருக்கும். ஒரு 15 நிமிடங்கள் வரை வைத்திருககலாம்.
பின்னர் மொபைலை வழக்கம் போல POWER OFF செய்து திரும்பவும் ON செய்தால் உங்கள் மொபைல் NORMAL MODE க்கு செல்லும்.
இப்பொழுது உங்கள் மொபைலில் வைரஸ், ஹேங், சூடு, பேட்டரி நீண்ட நேரம் இல்லாமல் போவது போன்ற பிரச்சினைகள் குறைந்து உள்ளதை உணர முடியும்.
இதற்கான வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.