Age Declaration Form 6 – வயது அறிவிப்பு படிவம்
18 வயது நிறைவடைந்த எந்த ஒரு இந்திய குடிமகனும் ஓட்டு போடும் தகுதியை அடைவார்கள். 18 வயது நிறைவடைந்த பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக நடக்கும் பிரத்தியேக முகாம்களிலும் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தும், ஆன்லைனில் விண்ணப்பித்தோம் நமது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இதற்காக நாம் இருக்கும் இடத்திற்கு முகவரி சான்று நமது வயதிற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். இது 18 வயது முதல் 21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு.
ஒருவேளை 21 வயதை தாண்டியவர்கள் இன்னும் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க வில்லை என்றால் அவர்கள் கூடுதலாக Age Declaration Form 6 – வயது அறிவிப்பு படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
நீங்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை சேர்க்க வேண்டும் அல்லது புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வீடியோ லிங்க் மற்றும் போஸ்ட் லிங்க் கீழே உள்ளது அதை பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.
2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க
Download Age Declaration Form 6 ANNEXURE -III
இந்த வயது அறிவிப்பு படிவத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Age Declaration Form 6 smaple – வயது அறிவிப்பு படிவம் எவ்வாறு பூர்த்தி செய்வது?
Age Declaration Form 6 – வயது அறிவிப்பு படிவம் டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- முதலில் உங்களது பெயர்
- அடுத்து உங்களது அப்பா அல்லது கணவர் பெயரை எழுதுங்கள்
- அடுத்து உங்களது முகவரி எழுதுங்கள்
- அதற்கு கீழே உங்களது பாராளுமன்ற தொகுதியை நிரப்புங்கள்
- அடுத்ததாக உங்களிடம் தேதி ஆகியவற்றை குறிப்பிடுங்கள்.
- இதற்குமுன் நான் எங்கும் வாக்காளர் அட்டை அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் கொடுக்கவில்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன் என்பதற்கு கீழே கையெழுத்து இடுங்கள்.
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் இதை ஸ்கேன் செய்து வைத்து அப்லோட் செய்து விடுங்கள்.