Contents
City Union Bank password – சிட்டி யூனியன் பாங்க் பாஸ்வேர்டு
City Union Bank -ல் கணக்கு வைத்திருக்கும் அதிகம் பேர்கள் அடிக்கடி ஆன்லைனில் தேடக்கூடிய ஒரு விஷயம் நெட் பேங்கிங் பாஸ்வேர்டு மறந்து விட்டது. அதை மாற்றுவது எப்படி என்று?
ஏனென்றால் City Union Bank -ஐ பொறுத்தவரை நல்ல எளிதான சேவை கிடைக்கும். எந்த கிளையில் கணக்கு இருந்தாலும், எந்த கிளையில் வேண்டுமானாலும் அதை இயக்கி கொள்ளும் வசதி, பணம் செலுத்துவதற்கென்று தரமான ATM மெஷின்கள் போன்ற தரமான சேவை கிடைப்பதால், நாம் பரிவர்த்தனைகளை வங்கி கிளைகளிலேயே அதிகம் முடித்துகொள்கிறோம்.
எனவே அதிக நெட் பேங்கிங் தேவை இல்லாதவர்கள் பாஸ்வேர்டு மறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் பழைய பாஸ்வேர்டு காலாவதியான பின்னர் புதிய பாஸ்வேர்டு உருவாக்கிய பின்னர் அது நினைவில் இல்லாமல் போவதும் ஒரு காரணம்.
சரி இந்த பதிவில் எப்படி சேமிப்பு கணக்கு நெட் பேங்கிங் சிட்டி யூனியன் பாங்க் பாஸ்வேர்டு மறந்து விட்டால் எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம்.
இந்த லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள். https://www.onlinecub.net/
Instant Password
அதில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் Personal என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ID எண்ணை டைப் செய்து Continue என்பதை கிளிக் செய்தால் வரும் தகவல்களில் Instant Password? என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் பக்கத்தில் உங்களது User ID தானாகவே வந்து இருக்கும். அதற்கு கீழே Branch ID என்று இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்களது கணக்கு உள்ள கிளையை தேர்வு செய்து கொள்ளுங்கள் செய்து கொள்ளுங்கள். அதற்கு கீழே choose option for validation என்று இருக்கும். அதில் உங்கள் டெபிட் கார்டு விவரம், உங்களது முதல் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இவற்றில் எந்த விபரம் உங்களுக்கு எளிதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த விவரங்களை கேட்கும் இடங்களில் டைப் செய்து கீழே Login Password, Transaction Password எதை நீங்கள் மாற்ற வேண்டுமோ அதை டிக் செய்து கொள்ளுங்கள். பின்னர் Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
Online verification code
அடுத்து வரும் பக்கத்தில் OVC request number, உங்கள் ஈமெயில், வங்கியில் இணைத்துள்ள மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதற்கு கீழே click here to go to the verify OVC screen என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும். இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு OVC ( online verification code) ஏழு இலக்கங்களில் ஒரு பாஸ்வேர்டு வரும். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இந்த பக்கத்தில் ஆன்லைன் ரிக்வெஸ்ட் நம்பர் என்ற இடத்தில் ரிக்வெஸ்ட் நம்பரையும், ஆன்லைன் வெரிஃபிகேஷன் கோட் என்ற இடத்தில் உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த பாஸ்வேர்டையும் டைப் செய்துகொள்ளுங்கள்.
பின்னர் உங்களது, user ID, branch ID, ஆகியவற்றை டைப் செய்து பின்னர் உங்களது முதல் பெயர் அல்லது பிறந்த தேதி இவை இரண்டில் ஏதாவது ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து அதற்கான தகவல்களை டைப் செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் verify go to password selection screen என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இறுதியாக வரும் இந்த பக்கத்தில் நீங்கள் சிட்டி யூனியன் பாங்க் பாஸ்வேர்டு மாற்றிக்கொள்ளலாம்.
எந்த பாஸ்வேர்டு வேண்டுமோ அதை இரண்டு முறை சரியாக டைப் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் உங்களது பாஸ்வேர்டு புதியதாக மாறிவிடும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதிகம் பேருக்கு பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில். நன்றி.