BSNL WINGS APP
இதுவரையில் இந்தியாவில் எந்த தொலைதொடர்பு நிறுவனமும் வழங்காத ஒரு சேவையை Bsnl நிறுவனம் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.BSNL WINGS என்ற பெயரில் இந்த புதிய சேவையை வழங்கபோகிறது.
இந்த சேவையில் என்ன புதுமை இருக்கிறது என்று பார்த்தால் நாம் இந்த செயலியில் இருந்து உலகத்தில் உள்ள எந்த நிறுவனத்தின் மொபைல் எண் மற்றும் லேண்ட்லைன் – களுக்கும் அழைத்து பேச முடியும்.
இதுவரை நாம் ஒரு செயலியில் இருந்து அதே செயலி -க்குதான் கால் செய்ய முடியும். அதாவது வாட்சப், பேஸ்புக், IMO, வைபர் போன்ற நிறுவங்களிலிருந்து அந்தந்த நிறுவனகளுக்குள்ளேதான் கால் செய்ய முடியும்.
செயலியிலிருந்து மொபைல் எண்ணிற்கு கால் செய்வதற்கு வெளிநாட்டில் அதிக நிறுவனங்கள் செயலிகள் வைத்து நடத்தி வருகின்றன. ஆனால் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த செயலியிலிருந்து மொபைல் எண்ணிற்கு கால் செய்யும் சேவையை எந்த இந்திய நிறுவனங்களும் இதுவரை வழங்கவில்லை.
சேவை தொடக்கம்
வருகின்ற 25.07.2018 – லிருந்து இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. 01.08.2018 – லிருந்து தனது சேவையை தொடங்க இருப்பதாக Bsnl நிறுவனத்தின் வலைத்தளத்தில் கூறியுள்ளார்கள்.
விலை
இந்த சேவை ஒரு வருடத்திற்கு ரூ. 1099. இந்திய அழைப்புக்கள் முழுவதும் இலவசம்.
வெளிநாட்டு அழைப்பு தேவைப்படுவோர்கள் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு அழைப்புக்கட்டணங்கள் Bsnl லேண்ட்லைன் கட்டண விகிதங்களே பொருந்தும்.
வேலை செய்யும் விதம்
இந்த சேவையை பயன்படுத்துவதற்கு நமக்கு Bsnl சிம் கார்டு தேவையில்லை. முன்பதிவு செய்து பணம் செலுத்தி BSNL WINGS செயலியை வாங்கிக்கொண்டு நமது மொபைல், டேப்லட், லேப்டாப் போன்ற சாதனங்களில் நிறுவிக்கொள்ள வேண்டும்.பிறகு எந்த வழியிலேனும் இண்டர்நெட்டை பயன்படுத்தி இந்த செயலியிலிருந்து நாம் அழைப்புகளை விடுக்கமுடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.