பெயர்தான் அரை ஆனால் இதன் வேலை வேற லெவல்

0
15979
arai keerai, arai keerai payangal, arai keerai benefits, அரைக்கீரை பயன்கள், அரைக்கீரை மருத்துவ பயன்கள், அரைக்கீரை மருத்துவ குணங்கள்,

Contents

அரைக்கீரை

பொதுவாக அனைத்து கீரை வகைகளிலுமே மனிதர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் அடங்கியுள்ளன. முளை கீரை, அரைக்கீரை, அகத்தி கீரை, குறிஞ்சா கீரை, மணத்தக்காளிக்கீரை, புளிச்சக்கீரை,வெந்தயக்கீரை, பசளிக்கீரை இவையெல்லாம் நமக்கு எளிதாக கிடைக்கும் கீரை வகைகள் ஆகும். நாம் இந்த பதிவில் அரைக்கீரையில் உள்ள சத்துக்களையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.

arai keerai, arai keerai payangal, arai keerai benefits, அரைக்கீரை பயன்கள், அரைக்கீரை மருத்துவ பயன்கள், அரைக்கீரை மருத்துவ குணங்கள்,

பேருக்குத்தான் அரைக்கீரை ஆனால் அனைத்து மருத்துவக் குணங்களும் அடங்கிய முழுக்கீரையாகக் காணப்படுகின்றது.

அரைக்கீரையில் தங்கச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், சுண்ணாம்புச்சத்து 364 மி.கி, மணிச்சத்து 52 மி.கி மற்றும் புரதச்சத்து 38.5 மில்லிகிராமும் உள்ளன. இக்கீரை மருத்துவத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஏற்ற உணவாகக் காணப்படுகின்றது. மேலும் இவர்களுக்கு உடல் சூடு அதிகரிப்பதால் அதை போக்க சிறந்த உணவாக அமைகின்றது. மேலும், தாய் பாலில் கலந்து குழந்தைகளுக்கு எவ்வித நோய்களும் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்

 • வாயு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
 • சளி மற்றும் இருமல் தொல்லையை குணமாக்கும்.
 • பசியைத் தூன்டுவதற்கு உதவுகிறது.
 • மலச்சிக்கலிருந்து விடுபடலாம்.
 • பிரசவம் அடைந்தப் பெண்களுக்கு இழந்த சக்தியையும்,பலத்தையும் தருகின்றது.
 • அரைக்கீரயை உண்பதனால் ஆண்மைக் குறைவிலிருந்து விடுபடலாம்.
 • வாத நோயிலிருந்து விடுபடலாம்.
 • நரம்பு சம்பந்தப்பட்ட வலிகளிலிருந்தும், நரம்பு தளர்ச்சியிலிருந்தும் விடுபடலாம்.
 • உடல் பலவீனம் உடையவர்களுக்கு சிறந்த உணவாகும்.
 • விஷக்கடியை முறிக்கும் சக்தி அதிக அளவு அரைக்கீரையில் உள்ளன.
 • ஆங்கில மருந்துகளின் வேகம் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்தும் விடுபடலாம்.
 • தினசரி அரைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் தேமல் மற்றும் சொறிசிரங்குகள் குணமாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.