புத்தாண்டு ராசி பலன்கள் 2019 விருச்சிகம்

2717
விருச்சிகம், விருச்சிக ராசி, விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிக ராசி புது வருட பலன்கள், விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிகம் ராசி புது வருட பலன்கள், விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 விருச்சிகம் ராசி பலன்கள், விருச்சிகம் ராசி பலன்கள் 2019, விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 விருச்சிகம், புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம், viruchigam, viruchigam raasi, viruchigam rasi new year 2019, viruchiga rasi palangal 2019, viruchiga rasi palan 2019, viruchiga rasi palangal 2019 in tamil, viruchiga rasi palan 2019 in tamil,

2019 New Year Predictions

விருச்சிகம்

சுய ஜாதகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்

பொதுவாக சொல்லப்படும் பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் – 2019

விருச்சிகம் ராசி அன்பர்கள் தனது ஏழரைச்சனியின் இறுதி கட்டத்தில் பயணிக்கபோகும் வருடம் இது.

கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நீங்கள் அனுபவித்து வந்த துயரங்களில் இருந்து உங்களை கடைதேற்றி, அடுத்த வருடத்தில் இருந்து உங்களுக்கு நடக்கவிருக்கும் நன்மைகளுக்கு அஸ்திவாரத்தையும் அமைத்து தரும் வருடமாக இந்த வருடம் உங்களுக்கு இருக்கபோகிறது

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள்.

மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும்.

இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள்,  அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர்  போன்ற அனைத்துத் தரப்பினருக்கும்  இந்த வருடம்  நல்ல பலன்களையே தரும்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். இருக்கும் வாகனத்தை விற்று விட்டு நல்ல வாகனம் வாங்க முடியும்.

வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும்.

ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.

இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப் பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும்.

கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பதால் மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி இந்த வருடத்தோடு முடியப் போவதால் விருச்சிக ராசிக்காரர்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும்.

பலன்கள் யாருக்கு, எவ்வளவு நடக்கும்?

மேலே சொன்ன பலன்கள் யாவும், விருச்சிகம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே.

இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள்.

அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (90 மதிப்பெண்கள்)
  • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (60 மதிப்பெண்கள்)
  • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
  • சுபர்கள், அசுபர்கள், சமர்கள் பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

விருச்சிகம், விருச்சிக ராசி, விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிக ராசி புது வருட பலன்கள், விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிகம் ராசி புது வருட பலன்கள், விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 விருச்சிகம் ராசி பலன்கள், விருச்சிகம் ராசி பலன்கள் 2019, விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 விருச்சிகம், புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம், viruchigam, viruchigam raasi, viruchigam rasi new year 2019, viruchiga rasi palangal 2019, viruchiga rasi palan 2019, viruchiga rasi palangal 2019 in tamil, viruchiga rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனது அருட்பார்வையால் அன்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான் உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார் அறிந்து கொண்டு இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

  • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு   –     செவ்வாய்க்கிழமை
  • ரிஷபம் அல்லது துலாமில் குரு            –     வெள்ளிக்கிழமை
  • மிதுனம் அல்லது கன்னியில் குரு        –     புதன்கிழமை
  • கடகத்தில் குரு                                      –     திங்கட்கிழமை
  • சிம்மத்தில் குரு                                     –     ஞாயிற்றுக்கிழமை
  • தனுசு அல்லது மீனத்தில் குரு              –     வியாழக்கிழமை
  • மகரம் அல்லது கும்பத்தில் குரு           –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.  

விருச்சிகம், விருச்சிக ராசி, விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிக ராசி புது வருட பலன்கள், விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிகம் ராசி புது வருட பலன்கள், விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 விருச்சிகம் ராசி பலன்கள், விருச்சிகம் ராசி பலன்கள் 2019, விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 விருச்சிகம், புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம், viruchigam, viruchigam raasi, viruchigam rasi new year 2019, viruchiga rasi palangal 2019, viruchiga rasi palan 2019, viruchiga rasi palangal 2019 in tamil, viruchiga rasi palan 2019 in tamil,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************