புத்தாண்டு ராசி பலன்கள் 2019 ரிஷபம்

0
2844
ரிஷபம், ரிஷப ராசி, ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷப ராசி புது வருட பலன்கள், ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷபம் ராசி புது வருட பலன்கள், ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 ரிஷபம் ராசி பலன்கள், ரிஷபம் ராசி பலன்கள் 2019, ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 ரிஷபம், புத்தாண்டு பலன்கள் ரிஷபம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் ரிஷபம், rishapam, rishapam raasi, rishapam rasi new year 2019, rishapa rasi palangal 2019, rishapa rasi palan 2019, rishapa rasi palangal 2019 in tamil, rishapa rasi palan 2019 in tamil,

Contents

2019 New Year Predictions

ரிஷபம்

சுய ஜாதகத்தில்யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்

பொதுவாக சொல்லப்படும்பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும்பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும்இன்னொருசூட்சமமும் உள்ளது.அந்த சூட்சமத்தையும் அதன்படிபலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டு பலன்கள் ரிஷபம் 2019

ரிஷப ராசிக்கு வருட ஆரம்பத்தில் அனைத்து விசயங்களிலும் கவனமாக இருக்க வைத்து வருட பிற்பகுதியில் அதன்மூலம் நல்லவை நடக்கும் வருடமாக இது இருக்கும்.

இயற்கைச் சுபக் கிரகமும் ஒரு மனிதனுக்குதேவையான அனைத்து நன்மைகளையும் அள்ளித் தருபவருமான குருபகவான் இம்முறை தமது சமசப்தம பார்வையால்உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சிபெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.

எப்படி இருந்தாலும்அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான ரிஷபத்தினர் தற்போது சாதகமற்ற பலன்களைஅனுபவித்து வருகிறீர்கள்.

குறிப்பாகமுப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்குவேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நெருக்கடிகளும், பணம்இல்லாத நிலைமையும் இருந்து வருகிறது.

பிறந்த ஜாதகவலு மற்றும் யோக தசாபுக்திகள் நடப்பவர்கள்மட்டும் இதற்கு விதிவிலக்காக துன்பங்கள் எதுவும் இல்லாமல் இருக்கமுடியும்.

மனம், உடல், பொருளாதாரம் என்று பல்வேறு வகைகளில் அதிகமானசிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களின் துயரங்களும் சங்கடங்களும்இவ்வாண்டின்இறுதியில் விலகும் வகையில் இந்த புத்தாண்டு இருக்கும்.

இளைய பருவத்தினர் இந்த வருடம் மட்டும்எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்படவேண்டிருக்கும். என்னதான் இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு சனி ராஜயோகாதிபதிஎன்பதால் மிகப்பெரிய கெடுதல்கள் எதையும் கண்டிப்பாக செய்யவே மாட்டார்.

எனவே அஷ்டமச் சனி தாங்க முடியாத கெடுபலனைச் செய்யுமோ என்று கவலைப்படவேண்டாம்.

வருடம் முழுவதும் அஷ்டமச் சனி அமைப்புஇருப்பதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும்.கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும்.

சில நேரங்களில்தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்துவிஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது

அஷ்டமச்சனிஎன்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படிஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கைஅனுபவங்களை கற்றுத் தரும் என்பதால் இளைய பருவ ரிஷப ராசிக்காரர்களைப்பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் நடக்க இருக்கும் அதிசார குருமாற்றம்  உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும்.ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே நடக்க இருக்கும் எதையும் எதிர்மறையாகப் பார்க்காமல் சுறுசுறுப்பாககாரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

ஆயினும் பணத்தின் அருமையை உங்களுக்குசனிபகவான்தான் புரிய வைக்க வேண்டும் என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான்நிழலின் அருமை தெரியும் என்ற பழமொழியின்படி இந்த வருடம் பணத்தட்டுப்பாட்டினையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கடன் வாங்க வேண்டியஅளவிற்கு நிலைமையையும் உருவாக்குவார்.

எனவே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்.இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாககவனித்து வந்தால் மட்டும் போதும்.

இதுபோன்றநேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி பத்தாயிரம் போட்டால் 1லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம்என்றோ சில தூண்டில்களை போட்டு ஒரு தொழில் ஆரம்பிக்க வைத்து அல்லது உங்களைபுதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார்.

பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும்முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம்புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரியவந்தாலோ கவனமாக இருங்கள்.

சிறப்பு பலனாக உங்களில் சிலர்(லக்னத்திற்குஅல்லது ராசிக்கு பன்னிரண்டில் ராகு இருக்க பிறந்தவர்கள்)வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று படிக்கவோ, வேலை செய்யவோ இருந்த தடைநீங்குகிறது. அயல்தேசத்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில்இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில்செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.அரசுதனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும்.

அலுவலகங்களில்சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள்.முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன்பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்புகிடைப்பது கடினம்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும்வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வரவாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம்.

தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள்இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவுகளும் இருக்கும்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்குபுறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால்சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.

அடிதடிசண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியதுஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால்அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம்.

தற்போது தீர்ப்பு வரும் நிலைஇருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்குசாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடியகாலகட்டம் இது.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன்இருப்பது நல்லது.

ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்தமுதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பேராசை பெருநஷ்டம் போன்றநிலைமைகள் இப்போது இருக்கும் என்பதால் ஸ்பெகுலேஷன் துறை பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

அதேபோல வட்டித்தொழில் செய்பவர்கள் கூடுதல்வட்டிக்கு ஆசைப்பட்டு தகுதியற்ற நபர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தபணம் திரும்பி வராது.

பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்துகொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்புஇருக்கிறது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும்.

இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.

மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும்எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒருவிஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.

தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில்வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்குவெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில்  அடிக்கடி பயணம் செய்யவேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும்வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு.விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாதமாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம்போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

குறிப்பிட்ட சிலர் சனியின்ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்குசெல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும்.

பேசும்போது வார்த்தைகளில் கவனமாகஇருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள்வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

நடுத்தரவயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால்உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும்மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

பெண்களுக்கு நல்ல பலன்கள்தான் அதிகம்இருக்கும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும்சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.  வேலைக்கு செல்லும்பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும்தற்போது கிடைக்கும்.

சிலர்தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக்கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும்கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சிலநிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

நிறைவாக ரிஷப ராசிக்கு ஆரம்பத்தில் கவனமாக இருக்க வைத்து பிற்பகுதியில் நல்லவை நடக்கும் வருடமாக இது இருக்கும்.

பலன்கள் யாருக்கு,எவ்வளவு நடக்கும்?

மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், ரிஷபம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள்.

அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றைஅன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடுபொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின்சுய ஜாதகத்தில்)

 • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(90 மதிப்பெண்கள்)
 • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும் (60மதிப்பெண்கள்)
 • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

 • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
 • சுபர்கள், அசுபர்கள், சமர்கள்பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

ரிஷபம், ரிஷப ராசி, ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷப ராசி புது வருட பலன்கள், ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷபம் ராசி புது வருட பலன்கள், ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 ரிஷபம் ராசி பலன்கள், ரிஷபம் ராசி பலன்கள் 2019, ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 ரிஷபம், புத்தாண்டு பலன்கள் ரிஷபம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் ரிஷபம், rishapam, rishapam raasi, rishapam rasi new year 2019, rishapa rasi palangal 2019, rishapa rasi palan 2019, rishapa rasi palangal 2019 in tamil, rishapa rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

 • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனதுஅருட்பார்வையால்அன்பர்களுக்குஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான்உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார்அறிந்து கொண்டுஇறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

 

 • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு  –     செவ்வாய்க்கிழமை
 • ரிஷபம் அல்லது துலாமில் குரு           –     வெள்ளிக்கிழமை
 • மிதுனம் அல்லது கன்னியில் குரு        –     புதன்கிழமை
 • கடகத்தில் குரு                                     –     திங்கட்கிழமை
 • சிம்மத்தில் குரு                                    –     ஞாயிற்றுக்கிழமை
 • தனுசு அல்லது மீனத்தில் குரு             –     வியாழக்கிழமை
 • மகரம் அல்லது கும்பத்தில் குரு          –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

 • திருச்செந்தூர் முருகன் கோயில்
 • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

ரிஷபம், ரிஷப ராசி, ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷப ராசி புது வருட பலன்கள், ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள், ரிஷபம் ராசி புது வருட பலன்கள், ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 ரிஷபம் ராசி பலன்கள், ரிஷபம் ராசி பலன்கள் 2019, ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 ரிஷபம், புத்தாண்டு பலன்கள் ரிஷபம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் ரிஷபம், rishapam, rishapam raasi, rishapam rasi new year 2019, rishapa rasi palangal 2019, rishapa rasi palan 2019, rishapa rasi palangal 2019 in tamil, rishapa rasi palan 2019 in tamil,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர,குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறியஉங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************