புத்தாண்டு ராசி பலன்கள் 2019 மேஷம்

0
2604
புத்தாண்டு பலன்கள் 2019 mesham மேஷம்

Contents

2019 New Year Predictions

மேஷம்

சுய ஜாதகத்தில்யாருக்கு எத்தனை சதவிகிதம்

பலன்கள் என்ற சூட்சமத்துடன்

பொதுவாக சொல்லப்படும்பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும்பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும்இன்னொருசூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படிபலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்.

புத்தாண்டுபலன்கள் மேஷம் – 2019

மேஷ ராசி அன்பர்களுக்கு பிறக்கப் போகும்2019-ம் ஆண்டு தொடக்கத்தில்சிற்சிலபின்னடவை கொடுத்தாலும் ஆண்டின் முடிவில் பின்னடைவுகள் எல்லாவற்றையும் சரி செய்து நன்மைகளைக் கொடுக்கும் வருடமாக இருக்கும்.

இதுவரைமனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல்இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புதுஉற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி  இருக்காது.

மேஷம் ராசிக்காரர்களுக்கு எதிர்காலநன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் வருடம் இது.

இருக்கும் இடத்தை விட்டுவெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதைஅறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களைகிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான்எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான்நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும்நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படைநிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும்மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

தற்போது சாதகமற்ற பலனைத்தரக்கூடிய இடமான எட்டில் இருக்கும் குருபகவான் பிறக்கவிருக்கும் வருடத்தின் மார்ச் மாத இறுதியில்அதிசாரம் எனும் அமைப்பில் சில மாதங்களுக்கு, யோகம் தரும் ஒன்பதாமிடத்திற்குமாறி பின் மீண்டும் தனது எட்டாம் நிலைக்கே திரும்பப் போகிறார்.

அதிசார நிலையில் இருக்கும் ஒரு கிரகம்தனது நல்ல, கெட்ட பலனை முழுமையாகத் தராது என்பதால், மார்ச்மாதத்திற்குப் பிறகு மேஷத்திற்கு குருவின் எட்டாமிட சாதகமற்ற பலன்கள்இருக்காது.

எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் நல்ல பலன்களை மட்டுமேஉங்களுக்கு தருகின்ற வருடமாக இருக்கும்.

உங்கள் வசம்இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிடநல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம்வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. தாயாராலும் அனுகூலம் உண்டு. தாய்வழிஉறவினர்களும் உதவுவார்கள்.

போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ்போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிதுபணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்சநாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பதுநல்லது.

மேலும் சில முக்கிய பலன்கள்

அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள்.தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்துசம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள்மாறுவார்கள்.

அடுத்து இந்த வருடம் மார்ச் மாதம் 6-ம் நாள் நடக்கஇருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும்நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம்தரும் அமைப்பு.

மூன்றாம்இடம் என்பது உதவிகள் கிடைக்கும் சகாய ஸ்தானம் என்பதாலும், பாபக் கிரகமானராகு மூன்றில் அமர்வது நன்மைகளைத் தரும் என்பதாலும் இந்த வருடம் முழுவதுமேஉங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள்கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும்.

ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாகஇஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள்பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு.

இதுவே ஜாதகர் இஸ்லாமியர்அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம்மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.

அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்ததொல்லைகள் தடைகள் தாமதங்கள்  விலகி நல்லவைகள் இந்த வருடம் நடக்கும். பிறந்தஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் இன்னும்மேன்மையான நல்ல பலன்கள் உண்டு.

மார்ச் மாதத்திற்குப் பிறகு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மைதரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதியான சூழல்இருக்கும்.

திருமணம்

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில்சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாகபிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும்.குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம்கிடைக்கும்.

அனைத்து மேஷ ராசியினருக்கும் பொருளாதாரமேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம்முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால்உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும்.

குறிப்பாக கடனைத் திருப்பித்தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும்.ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்படவாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்புகிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

ஏதேனும் ஒரு சிறுகாரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வுபோன்றவைகள் தற்போது கிடைக்கும்.அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு.

அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில்இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இதுகூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்குபதவிகள் தேடி வரும்.பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம்வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

வியாபாரம்

சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்துசுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.

சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள்ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.

வியாபாரிகளுக்குவியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது.கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.

விவசாயிகளுக்கு இம்முறை இயற்கைஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும்விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடுசெய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

எல்லாவகையிலும் வருமானம் நன்றாகஇருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கைகொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்லமுடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைகிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாகவெளிநாடு சென்று திரும்புவார்கள்.

புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்குசென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயாரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும்உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடுஅதிகமாகும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடுநடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தைதரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்குமிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பதுநல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவேநிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலானகழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்குதாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும்.

வேலை

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடியகாலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப்பெறுவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்துவிஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக்கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும்.

கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும்பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். அதிசார அமைப்பின்மூலம் ராசியை குரு பார்க்கப் போவதால் வெளியிடங்களில் மதிப்பு, மரியாதைகௌரவம் நல்லபடியாக இருக்கும்.

உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும்உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள்நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்தகருத்து வேற்றுமைகள் நீங்கும்.

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதாரவசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில்சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்துஉங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

கிரகநிலைமைகள்மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்துவிதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். மேஷ ராசிக்காரர்கள் நீண்டநாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள்ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடம் இது.

பலன்கள் யாருக்கு,எவ்வளவு நடக்கும்?

மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், மேஷம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள்.

அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றைஅன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடுபொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின்சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் -உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(90 மதிப்பெண்கள்)
  • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும் (60மதிப்பெண்கள்)
  • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
  • சுபர்கள், அசுபர்கள், சமர்கள்பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

புத்தாண்டு பலன்கள் 2019 mesham மேஷம்

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனதுஅருட்பார்வையால்அன்பர்களுக்குஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான்உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார்அறிந்து கொண்டு இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

  • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு –     செவ்வாய்க்கிழமை
  • ரிஷபம் அல்லது துலாமில் குரு        –     வெள்ளிக்கிழமை
  • மிதுனம் அல்லது கன்னியில் குரு      –     புதன்கிழமை
  • கடகத்தில் குரு                          –     திங்கட்கிழமை
  • சிம்மத்தில் குரு                         –     ஞாயிற்றுக்கிழமை
  • தனுசு அல்லது மீனத்தில் குரு         –     வியாழக்கிழமை
  • மகரம் அல்லது கும்பத்தில் குரு        –     சனிக்கிழமை

வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

புத்தாண்டு பலன்கள் 2019 mesham மேஷம்

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை

முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்)தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர,குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறியஉங்களின் ஜாதகத்தை

70102-92553அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************