புத்தாண்டு ராசி பலன்கள் 2019 துலாம்

0
2712
துலாம், துலாம் ராசி, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 துலாம் ராசி பலன்கள், துலாம் ராசி பலன்கள் 2019, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 துலாம், புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் துலாம், thulam, thulam raasi, thulam rasi new year 2019, thulam rasi palangal 2019, thulam rasi palan 2019, thulam rasi palangal 2019 in tamil, thulam rasi palan 2019 in tamil,

Contents

2019 New Year Predictions

துலாம்

சுய ஜாதகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்  

பொதுவாக சொல்லப்படும் பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது.

அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டு பலன்கள் துலாம் – 2019

துலாம் ராசிக்கு வருடம் ஆரம்பத்தில் இருந்தே நல்ல பலன்கள் அள்ளித்தரும் தரும் வகையில் வருட கிரகங்களின் கோட்சாரங்கள் நல்ல நிலையில் அமைந்துள்ள வருடமாக இந்த வருடம் இருப்பதால் மனமும் உடலும் துள்ளி திரிய போகிறது

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

யாரையும் நம்பக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.

தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

குலதெய்வத்தின் அருள் இந்த வருடம் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.

உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது

வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கேதுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு மாறுவது துலாம் ராசிக்கு ஒரு சிறந்த அமைப்பு.

எனவே இந்த ஆண்டின் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.

கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோக நிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் துலாம் ராசிக்கு வர இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.

திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும்.

அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும்.

ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும்.

தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.

குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும்.

ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும்.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

ஆக மொத்தத்தில் துலாம் ராசிக்கு இந்த புதிய வருடம், கடந்த 10 வருடங்களாக உங்களுக்கு இருந்து வந்த துயரங்களை துடைத்தெடுத்து, ஆனந்த கோலத்தில் உங்களை நீங்களே, பார்த்து பெருமைப்பட்டு கொள்ள செய்யபோகும் வருடமாக இந்த வருடம் இருப்பதால் மனமும் உடலும் துள்ளி திரிய போகிறது

பலன்கள் யாருக்கு, எவ்வளவு நடக்கும்?

மேலே சொன்ன பலன்கள் யாவும், துலாம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (90 மதிப்பெண்கள்)
  • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (60 மதிப்பெண்கள்)
  • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
  • சுபர்கள், அசுபர்கள், சமர்கள் பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

துலாம், துலாம் ராசி, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 துலாம் ராசி பலன்கள், துலாம் ராசி பலன்கள் 2019, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 துலாம், புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் துலாம், thulam, thulam raasi, thulam rasi new year 2019, thulam rasi palangal 2019, thulam rasi palan 2019, thulam rasi palangal 2019 in tamil, thulam rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனது அருட்பார்வையால் அன்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான் உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார் அறிந்து கொண்டு இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.  

  • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு   –     செவ்வாய்க்கிழமை
  • ரிஷபம் அல்லது துலாமில் குரு            –     வெள்ளிக்கிழமை
  • மிதுனம் அல்லது கன்னியில் குரு         –     புதன்கிழமை
  • கடகத்தில் குரு                                      –     திங்கட்கிழமை
  • சிம்மத்தில் குரு                                     –     ஞாயிற்றுக்கிழமை
  • தனுசு அல்லது மீனத்தில் குரு              –     வியாழக்கிழமை
  • மகரம் அல்லது கும்பத்தில் குரு           –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.  

துலாம், துலாம் ராசி, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள், துலாம் ராசி புது வருட பலன்கள், துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 துலாம் ராசி பலன்கள், துலாம் ராசி பலன்கள் 2019, துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 துலாம், புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் துலாம், thulam, thulam raasi, thulam rasi new year 2019, thulam rasi palangal 2019, thulam rasi palan 2019, thulam rasi palangal 2019 in tamil, thulam rasi palan 2019 in tamil,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************