புத்தாண்டு ராசி பலன்கள் 2019 கடகம்

0
2553
கடகம், கடக ராசி, கடக ராசி புத்தாண்டு பலன்கள், கடக ராசி புது வருட பலன்கள், கடகம் ராசி புத்தாண்டு பலன்கள், கடகம் ராசி புது வருட பலன்கள், கடக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கடகம் ராசி பலன்கள், கடகம் ராசி பலன்கள் 2019, கடகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கடகம், புத்தாண்டு பலன்கள் கடகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கடகம், kadagam, kadagam raasi, kadagam rasi new year 2019, kadaga rasi palangal 2019, kadaga rasi palan 2019, kadaga rasi palangal 2019 in tamil, kadaga rasi palan 2019 in tamil,

Contents

2019 New Year Predictions

கடகம்

சுய ஜாதகத்தில்யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்

பொதுவாக சொல்லப்படும்பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும்பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும்இன்னொருசூட்சமமும் உள்ளது.அந்த சூட்சமத்தையும் அதன்படிபலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டு பலன்கள் கடகம்- 2019

கடக ராசிக்கு வருடம் முழுவதும் அதிக நன்மைகளை அள்ளித்தர காத்திருக்கிறது, மனம், உடல், உயிர் அனைத்தும் தித்திப்பில் திகழபோகும் தித்திப்பான வருடம் இது.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும்.கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம்அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலைஉருவாகும்.

இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும்தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப்பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

வேலை செய்யும் இடத்தில் அதிருப்திகளும் சஞ்சலங்களும்விரக்தியும் இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடியஇடமாற்றங்கள் உண்டு.

உங்களுக்கு இருந்து வந்தமனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறைஎண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்றஅனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணகாலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம்நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரைஅடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கைநல்லபடியாக அமையும்.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில்இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில்நல்ல செய்திகள் கிடைக்கும்.

கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்பஉறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்யமுடியும்.

வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள்.இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெறமுடியும்.

பாவக்கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில்கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாகும்.

அதன்படி இந்த புத்தாண்டில் தொடக்கத்திலேயே ஆறாமிடத்தில் சனி இருப்பது கடகத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும் மேலும் மார்ச் மாதத்தில் கேதுவும்ஆறாமிடத்திற்கு மாறப் போகிறார்.

இது உங்களுக்கு தொழில் அமைப்புகளில் யோகம்தரும். அதேபோல குருபகவானும் ஐந்தாமிடத்தில் இருப்பதால் கடகத்தின்முன்னேற்றத்திற்கு தடைகள் எதுவும் இந்த வருடம் கோட்சார ரீதியாக இல்லை.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்தமுட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கிநேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்கமுடியும்.

எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போதுபலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போதுசெய்யலாம்.

அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது. இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம்நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.

அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பயணங்களால்உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள்உங்களுக்கு நடக்கும்.

இளைஞர்கள்மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளைசந்திப்பீர்கள்.

எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்தவருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.

இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியானநிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள்சேர்க்கையும் இருக்கும்.

இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம்உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளையபருவத்தினருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள்.நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும். சிரமங்கள் அனைத்தும்  தீரும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும்என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்புபடிக்கவோ செல்ல முடியும்.

அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்டசிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகனமாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம்கிடைக்கும்.

இதுவரைசொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட்வாங்குவீர்கள்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல்நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதைவாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு  பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும்இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

புனிதயாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள்செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன்அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்குசென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும்பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்றகடகராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தைவளப்படுத்திக் கொள்ள முடியும். கடகத்திற்கு கோட்சார ரீதியில் கவலை இல்லாதவருடம் இது. எதையும் துணிந்து செய்யலாம்.

அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் கடக ராசிக்கு அமையவிருக்கிறது

பலன்கள் யாருக்கு,எவ்வளவு நடக்கும்?

மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், கடகம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே.

இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள்.

அவற்றைஅன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடுபொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின்சுய ஜாதகத்தில்)

 • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(90 மதிப்பெண்கள்)
 • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும் (60மதிப்பெண்கள்)
 • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லதுசமர்கள் இருக்க வேண்டும்(30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

 • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
 • சுபர்கள், அசுபர்கள், சமர்கள்பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

கடகம், கடக ராசி, கடக ராசி புத்தாண்டு பலன்கள், கடக ராசி புது வருட பலன்கள், கடகம் ராசி புத்தாண்டு பலன்கள், கடகம் ராசி புது வருட பலன்கள், கடக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கடகம் ராசி பலன்கள், கடகம் ராசி பலன்கள் 2019, கடகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கடகம், புத்தாண்டு பலன்கள் கடகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கடகம், kadagam, kadagam raasi, kadagam rasi new year 2019, kadaga rasi palangal 2019, kadaga rasi palan 2019, kadaga rasi palangal 2019 in tamil, kadaga rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

 • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனதுஅருட்பார்வையால்அன்பர்களுக்குஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான்உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார்அறிந்து கொண்டுஇறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

 • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு   –     செவ்வாய்க்கிழமை
 • ரிஷபம் அல்லது துலாமில் குரு            –     வெள்ளிக்கிழமை
 • மிதுனம் அல்லது கன்னியில் குரு        –     புதன்கிழமை
 • கடகத்தில் குரு                                      –     திங்கட்கிழமை
 • சிம்மத்தில் குரு                                     –     ஞாயிற்றுக்கிழமை
 • தனுசு அல்லது மீனத்தில் குரு              –     வியாழக்கிழமை
 • மகரம் அல்லது கும்பத்தில் குரு           –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

 • திருச்செந்தூர் முருகன் கோயில்
 • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

கடகம், கடக ராசி, கடக ராசி புத்தாண்டு பலன்கள், கடக ராசி புது வருட பலன்கள், கடகம் ராசி புத்தாண்டு பலன்கள், கடகம் ராசி புது வருட பலன்கள், கடக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கடகம் ராசி பலன்கள், கடகம் ராசி பலன்கள் 2019, கடகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கடகம், புத்தாண்டு பலன்கள் கடகம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கடகம், kadagam, kadagam raasi, kadagam rasi new year 2019, kadaga rasi palangal 2019, kadaga rasi palan 2019, kadaga rasi palangal 2019 in tamil, kadaga rasi palan 2019 in tamil,

 குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர,குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRIJAISAKTHIJOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறியஉங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************