நமது மொபைலில் இருந்து நமக்கான வாக்குச்சாவடி எங்குள்ளது என்று கண்டுபிடிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் 2019 வரவிருக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் அனைத்து மாநிலங்களுக்கும் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
வாக்குச்சாவடி
இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு புதிதாக வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக மாறியுள்ள இளைஞர்கள் மற்றும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முகவரி மாற்றம் செய்துள்ளவர்கள் மாவட்டத்திற்குள் தொகுதி மாற்றம் செய்தவர்கள், மாற்றத்திற்கு விண்ணப்பித்த பின் தங்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் மாறி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் எந்த வாக்குச்சாவடி -யில் நீங்கள் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை நமது மொபைலில் இருந்தே எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பின்வரும் லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.
[wp_ad_camp_3]
அதில்Search By Epic Number என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பிறகு இந்தப் பக்கம் வரும். இதில் உங்களது வாக்காளர் அட்டை எண்ணை டைப் செய்யுங்கள்.
அதற்கடுத்து உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்யுங்கள்.
அதற்கடுத்து கீழே உள்ள கேப்ட்சா எண்ணை டைப் செய்து Search என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் இந்த பக்கத்தில் நீங்கள் டைப் செய்த அடையாள அட்டை எண், உங்களது பெயர், உங்களது அப்பா பெயர், உங்களுடைய மாவட்டம், அதற்கடுத்து Polling Station என்பதற்கு கீழே நீங்கள் எந்த பள்ளியில், எந்த வகுப்பறையில் உங்களுக்கான வாக்குப் பதிவை நீங்கள் செய்யவேண்டும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதைப் பார்த்து உங்களுடைய வாக்குச்சாவடியை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த View details என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அட்டை பற்றிய மற்ற தகவல்களை நீங்கள் காணமுடியும்.
அதில் உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணின் வரிசை எண், பாகம் எண் உங்களின் வாக்குச்சாவடி போன்ற விவரங்களும் அதில் இருக்கும்.
இதில் நமக்கு தேவையான விவரங்களை நாம் பார்த்துக் கொள்ளலாம்.
எனவே இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள் நன்றி.