Contents
வெந்தயம்
நாம் பெரும்பாலும் எளிதாக கிடைக்கும் பொருட்கள் எவ்வளவு மகத்துவம் நிறைந்ததாக இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அந்த வரிசையில் வெந்தயம் – ம் ஒன்று.
பெரும்பாலான மக்கள் வெந்தயத்தை பற்றி அறிந்த ஒரே தகவல் வெந்தயம் குளிர்ச்சி. ஆனால் வெந்தயத்தில் குளிர்ச்சி மட்டும் இல்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
கார்போஹைட்ரேட், புரதம், நல்ல கொழுப்பு சத்துக்களும் அடங்கியுள்ளன.
விட்டமின் ஏ, சி, பி6, போலேட்ஸ், நியாசின், பைரிடாக்சின், ரிபோப்லேவின்,தயாமின், சோடியம், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து, இரும்புச்சத்து,பாஸ்பரஸ்,துத்தநாகம்,செலினியம்,மாங்கனீசு,மெக்னீசியம் போன்ற அணைத்து சத்துக்களும் வெந்தயத்தில் அடங்கியுள்ளன.
வெந்தயம் டீ
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலையில் குடிப்பது, சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிப்பது, வெந்தய கஞ்சி போன்றவைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வெந்தய டீ கொஞ்சம் புதிது. இதை எப்படி செய்வது, அதனால் என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.
தேவையான அளவு வெந்தயம், தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடிவைத்து நன்கு கொதிக்கவைக்கவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சிறிது ஆறியதும் அதில் உண்மையான தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்தால் அதுதான் வெந்தய டீ. மிக மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு மருத்துவ பானம் இது.
வெந்தயம் டீ -யின் பயன்கள்
வெந்தய டீ தினமும் பருகிவர தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும் தாய்மார்களுக்கு ஹார்மோன்கள் தூண்டப்பட்டு தாய்ப்பால் நன்கு சுரக்க ஆரம்பிக்கும்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அனைவரும், இந்த வெந்தய டீ தினமும் பருகி வந்தால் நோய் குறைவதை உணர முடியும்.
பெண்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் அவர்களுக்குள்ள ஹார்மோன் பிரச்சினைகள் குறைந்து, மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
குடலில் உள்ள தேவை இல்லாத கழிவுகள அகற்றி வயிற்றை சுத்தப்படுத்துகிறது.
பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இந்த வெந்தய டீ குடித்து வந்தால் மலசிக்கலில் இருந்து விடுபடலாம்(குழந்தைகளுக்கு அளவாக கொடுக்கவும்).
மேலும் இந்த வெந்தய டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே இதை தொடர்ந்து பருகி வர உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறைய உதவுகிறது.
வெந்தயத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள உப்பை குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து இதயம் பாதிப்படைவது குறைகிறது.
நேரத்திற்கு சாப்பிடாதவர்களுக்கு வரும் நெஞ்செரிச்சல், அதை தொடர்ந்து வரும் அல்சர் போன்ற நோய்களுக்கு இந்த வெந்தய டீ ஒரு சிறந்த மருந்து.
முக்கியமாக இந்த வெந்தய டீ காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.
மேலும் அதிகமான மக்களுக்கு காணப்படும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு, இந்த வெந்தயம் டீயை தொடர்ந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவதை உணர முடியும்.
உடல் சூட்டை வெகுவாக குறைப்பதால் முடி வளர்ச்சியை ஊக்குவித்து அடர்த்தியாக வளர உதவுகிறது. உடல் சூட்டால் உண்டாகும் பித்தம், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த வெந்தய டீ ஒரு நிரந்தர தீர்வாகும்.