2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க

0
6101
how to add name in 2021 voters list in tamilnadu voter id apply online tamilnadu 2021

Contents

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – புதிய வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க

18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் நாட்டின் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமான ஓட்டுப்போடும் உரிமை தானாக வந்து விடும். இதற்காக நாம் வாக்காளர் பட்டியலில் நமது பெயரை சேர்த்து விடவேண்டும்.

இதற்காக ஆங்காங்கே தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்கள் நடைபெறும்.

ஆனால் தற்போது ஆன்லைனிலேயே வீட்டிலிருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்ப்யூட்டரில் இருந்து பதினெட்டு வயது நிரம்பி இருந்தால் நமது முகவரிச் சான்று மற்றும் வயது சான்று இவைகளைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் நமது பெயரை சேர்த்து புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட முடியும்.

இதை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவைப்படும் முகவரி சான்றுகள்

  1. Indian passport
  2. Driving licence
  3. Bank, kisan, post office current passbook
  4. Ration card
  5. Income tax assessment order
  6. Rent agreement
  7. Water bill
  8. Telephone bill
  9. Electricity bill
  10. Gas connection bill
  11. Post letter mail delivery through Indian Postal department

இவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க முன்கூட்டியே உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேவையான வயது சான்றுகள்

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வயதுச் சான்றாக உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  1. Birth certificate
  2. Mark sheet of 5th or 8th or 10th
  3. Indian passport
  4. PAN card
  5. Driving licence
  6. Aadhar letter issued by UIDAI

Age Declaration Form Download

Download age declaration from for voter id epic

வாக்காளராக விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2021 வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க

  1. https://www.nvsp.in/Account/Login இந்த லிங்கை கிளிக் செய்து, Fresh Inclusion / Enrolment என்பதை கிளிக் செய்யுங்கள்.
  2. அடுத்து நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்களா அல்லது வெளிநாட்டில் என்பதை தேர்ந்தெடுத்து பின்னர் உங்கள் மாநிலத்தையும் தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
  3. அதற்கடுத்து வரும் பக்கத்தில் உங்களின் பாராளுமன்ற தொகுதி,முகவரி, எந்த தேதியிலிருந்து தற்போதைய முகவரியில் வசித்து வருகிறீர்கள் போன்ற அடிப்படை தகவல்களை டைப் செய்யுங்கள்.
  4. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2021 வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கபின்னர் நீங்கள் வசிக்கும் முகவரிக்கு உள்ள முகவரி சான்று அப்லோட் செய்ய வேண்டும். இதற்கான ஃபார்மேட் jpg, jpeg 2mp க்குள் இருக்க வேண்டும். அதற்கு கீழே உங்கள் குடும்பத்திலுள்ள வேறு யாருடைய வாக்காளர் அட்டை எண்ணை இதில் கொடுக்கலாம்.
  5. அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் உள்ள உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொடுக்கலாம். பின்னர் அடுத்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.
  6. இந்த பக்கத்தில் உங்களது பிறந்த தேதி மாநிலம் மாவட்டம் இவற்றைத் தேர்ந்தெடுத்து பின்னர் உங்கள் வயதிற்கான சான்றை அப்லோட் செய்ய வேண்டும்.
  7. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2021 வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க 218 வயதிலிருந்து 21 வயதிற்குள் இருந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முதன்முறையாக விண்ணப்பிக்கும்போது ஆதார் அவர்கள் இங்கே கொடுத்துள்ள முகவரிகளில் ஏதேனும் ஒன்றை அப்லோடு செய்து கொள்ள முடியும்.
  8. நீங்கள் 21 வயது தாண்டி இப்பொழுது புதிதாக வாக்காளர் அட்டை -க்கு விண்ணப்பித்தால் உங்களிடம் உள்ள முகவரி சான்றுடன் Age Declaration form பூர்த்தி செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
  9. இதை முடித்த பின்பு அடுத்த பக்கத்திற்கு வந்தீர்களானால், உங்களது பெயர், அப்பா, அம்மா அல்லது கணவர் பெயர் போன்றவற்றை கொடுத்து உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். இதற்கான ஃபார்மேட் pg, jpeg 2mp க்குள் இருக்க வேண்டும்.
  10. உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை நீங்கள் விரும்பினால் அடுத்ததாக வரும் பக்கத்தில் டைப் செய்து கொள்ளலாம். ஆனால் கொடுத்தால் நல்லது.
  11. இடம் தேதி ஆகியவற்றை அடுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பித்தப்பின் என்ன செய்ய வேண்டும்?

Next என்பதை கிளிக் செய்தால் நீங்கள் நிரப்பிய விபரங்கள் அனைத்தும் பிரிவியூ ஆகும். அதில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்பதை கவனமுடன் சரிபார்க்கவும்.

இதில் ஏதேனும் தவறு இருந்தால் Bake பட்டனை அழுத்தி திருத்திக்கொள்ள முடியும். எல்லாம் சரியாக இருந்தால் Submit -ஐ கிளிக் செய்தால் பின்னர் உங்களுக்கு Reference Number வரும். அதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த Reference Number -ஐ வைத்து நமது விண்ணப்பத்தின் நிலையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ள முடியும்.

https://www.nvsp.in/Forms/trackstatus

வாக்காளர் அட்டை வீட்டிற்கு வருமா?

உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு EPIC Number வந்துவிட்டால் அதை வைத்து வாக்காளர் அட்டை க்கு என்று தனியாக உள்ள இசேவைக்கு சென்று வாக்காளர் அட்டை வாங்கிகொள்ளலாம்.

YouTube வீடியோ