வதக்கு சட்னி
வீட்டில் சமைக்கும் பெண்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினை இன்றைக்கு என்ன சட்னி வைப்பது? இன்று என்ன குழம்பு வைப்பது? என்பதுதான். அதிகமான வீட்டில் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இவை இரண்டு மட்டுமே மாற்றி மாற்றி வந்து கொண்டிருக்கும். இதில் கொஞ்சம் வித்தியாசமாக வேண்டும் என்றால் சமயத்தில் இந்த வதக்கு சட்னி இல்லத்தரசிகளுக்கு நினைவுக்கு வரும்.
இந்த வதக்குச்சட்னி -யை செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இவைகள் நாக்கிற்கு அலுத்துப் போகும்போது விதவிதமாக சட்னி செய்ய நாம் தேடலில் இறங்கி விடுவோம். அவ்வாறு தேடலில் இறங்கும் இல்லத்தரசிகளுக்காக சட்னி வகைகளை நமது பதிவுகளில் படித்து பயன் பெறுங்கள்.
மிகவும் சுவையான செட்டிநாடு வதக்கு சட்னி -க்கு தேவையான பொருட்கள்:
- சிறிதளவு சின்ன வெங்காயம்
- சிறிதளவு பூண்டு
- கடுகு ஒரு ஸ்பூன்
- வற மிளகாய் காரத்திற்கு ஏற்ப
- தேவையான அளவு உப்பு
- ஒரு சிறிய தக்காளி
வதக்கு சட்னி செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும்.
- எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு பொரியவிடவும்.
- கடுகு பொரிந்தவுடன் வற மிளகாய் நன்கு வதக்கவும்.
- பின்னர் பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
- இவை நன்கு வதங்கியவுடன் தக்காளிசேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதை எடுத்து நன்கு ஆற வைக்கவும்.
- அவை ஆறியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்னர் அதை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும். இப்பொழுது தோசை அல்லது இட்லி சுடச்சுட தயார் செய்து வதக்குச்சட்னியில் தொட்டு சாப்பிட்டால் தேனாமிர்தம்தான்…..