ராகு கேது பெயர்ச்சி 2019 மேஷம்

1
2685
ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி 2019 தேதி, ராகு கேது பெயர்ச்சி எப்போது, ராகு கேது பரிகாரம், குரு கேது பெயர்ச்சி 2019 மேஷம், ராகு கேது பெயர்ச்சி மேஷம் 2019, மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி, மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசி, மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி, மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020 மேஷம், மேஷ ராசி கேது பெயர்ச்சி 2019 to 2020, மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி தோசம் நீங்க, ராகு கேது தோஷம் நீங்க, ராகு கேது 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 எளிய பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 மேஷம் பரிகாரம், மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி மேஷம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசி, 2019 to 2020 மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி, mesham rasi, mesham rasi ragu kethu peyarchi, mesham rasi ragu kethu peyarchi 2019, mesha rasi ragu kethu peyarchi 2019, ragu kethu peyarchi 2019 to 2020, ragu kethu peyarchi 2019 to 2020 mesham, ragu kethu peyarchi 2019 to 2020 mesha rasi, aries rahu ketu transit, aries rahu ketu transit 2019, aries rahu ketu transit 2019 to 2020, Aries, aries horoscope 2019,

Contents

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது

ராகு கேது பெயர்ச்சி 2019 மேஷம்

மேஷம் ராசியில் பிறந்த அன்பர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள், மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில்  மேஷம் ராசியும் ஒன்று.

ராகு இருப்பது 4ல் (கடகம்) – வரவிருப்பது 3ல் (மிதுனம்)

கேது இருப்பது 10ல் (மகரம்) – வரவிருப்பது 9ல் (தனுசு)

கடந்த காலம்

கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், தன் சுகம் ஆகிய பலன்களை காட்டக் கூடிய நான்காமிடத்தில் இருள் கிரகமான ராகுபகவான் அமர்ந்திருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மேற்கண்ட விஷயங்களில் மேஷம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நடைபெறவில்லை.

குறிப்பாக வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த நிலைமை, சொந்த வீட்டுக் கனவு இழுத்துக் கொண்டே போகுதல், தாயார் வழி விஷயங்களில் தடைகளும், தாமதங்களும், அம்மா சம்பந்தபட்ட விஷயங்களில் எதிர்மறை பலன்கள், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை, உயர்கல்வி கற்க தடை, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறை ஆகியவை நான்காமிடத்தில் இருந்து வந்த ராகுவால் நடந்து கொண்டிருந்தன.

ராகு கேது பெயர்ச்சி 2019-2020

முன்னர் சொன்ன, சாதகமற்ற பலன்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மாறுதல் அடைந்து அனைத்திலும் இருக்கும் தடைகள் உங்களுக்கு நீங்கும்.

மூன்றாமிட ராகு

தன்னுடைய 18 ஆண்டுகால ஒரு முழுச் சுற்றில் ராகு-கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் மட்டுமே நற்பலன்களை தருவார்கள் எனவே 18 ஆண்டுகளுக்கு மட்டுமே வரக் கூடிய மூன்றாமிட ராகு தற்போது மேஷம் ராசிக்காரர்களுக்கு அமைந்திருப்பதால் இது ஒரு சிறப்பான ஒரு நற்பலன்களை தரக் கூடிய பெயர்ச்சியாகவே மேஷம் ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

ஒன்பதாமிட கேது

ஒன்பதாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் அவர் மாறப்போகும்  தனுசு வீடு குருவின் வீடு என்பதால், சிலருக்கு ஆன்மிக எண்ணங்களை கூடுதலாக தருவார். பாக்கிய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேதுவால் இதுவரை கிடைக்காத சில பாக்கியங்கள் உங்களுக்கு இப்போது கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

அவரவர்களின் வயதிற்கேற்ப அந்த வயதிற்குரிய நல்ல அமைப்புகள் இப்போது நிறைவேறும். தடைகள் விலகும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.

வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

வேலை, வெளிநாடு, தனவரவு

[wp_ad_camp_3]

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு.

இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

சிலருக்கு இப்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.  அந்த மாற்றம் வேண்டாததாக, பிடிக்காததாக இருக்கலாம்.

சில நிலைகளில் சீதோஷ்ண நிலை ஒத்து வராத இடங்களில் இருக்க வேண்டியிருக்கும். எங்கேயாவது நமது தாய்மொழி காதில் கேட்காதா என்று ஏங்கும்படி முற்றிலும் அந்நிய மொழி, இன, மத பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

வேலை செய்பவர்களும் இருக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வருவது நல்லது.

மேலதிகாரி சொல்லும் பேச்சுகளைக் கவனமாக கேட்டு நடங்கள். அலுவலகங்களில் வீண் ஈகோ பார்க்க வேண்டாம். வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போக போகிறேன் என்பது இந்த நேரங்களில் உதவாது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இப்போது நடக்கும் என்பதால் இருக்கும் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது.

அல்லது இன்னொரு வேலை கிடைத்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. ஆனால் புதிதாய்க் கிடைக்கும் வேலை நன்றாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

சில நேரங்களில் இந்தப் பேயை விட அந்தப் பிசாசிடமே இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கும்.

அரசு, தனியார், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் சம்பள உயர்வு, படிகள் போன்றவை ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

குடும்பம்

[wp_ad_camp_3]

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும்.

கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

பொருளாதார நிலை மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும்.

வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். அதே சமயம் கடன்களையும் உருவாக்கும்.

பிற இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.

அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். ராகு-கேதுப் பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

முன்னேற்ற பாதை

[wp_ad_camp_3]

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது.

இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத உங்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், அதே சமயம், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் ஒரு காலகட்டம் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பலன்கள்

(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து சில மாதங்களில் முழு சுபகிரகமான குருவின் பெயர்ச்சியின் மூலம், குரு உங்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் வரவிருக்கிறார்.

மேலும் அவர், உங்களுக்கு பாக்கியாதிபதியும் கூட, பாக்கியாதிபதியே பாக்கிய ஸ்தானத்தில் வந்து அமரபோவது மிக சிறப்பு.,

அதனை தொடர்ந்து சில மாதங்களில் நடக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களுக்கு பத்தாமிடத்தில் அமர்  இருக்கும் நிலையில் ராகு-கேதுக்கள் முயற்சி மற்றும் தைரிய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் வருவது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைப்பு.

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால் எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி’

ராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி வரை

(07.03.2019 முதல் 04.11.2019 வரை)

நல்ல பலன்கள் அதிகம் நடக்கும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். வருமானம் வந்தால்தானே செலவு செய்ய முடியும்? எனவே பணவரவும் திருப்தியாக இருக்கும்.

நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். இந்தப் பெயர்ச்சியில் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது.

அதேநேரத்தில் முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும்  அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செய்யாத தவறுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால் எதற்கும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி பின்

(04.11.2019 முதல் 24.01.2020 வரை)

நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும்.

வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். சிலருக்கு இந்த காலத்தில் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், புதிய கடன்களையும் (சமாளிக்க சற்று கடினமாக உள்ள வகையிலான), பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கே உரிய போக்கால் மனக்கஷ்டங்களையும் தருவார்.

ராகு கேது பெயர்ச்சியில் – சனிபெயர்ச்சிக்கு பின்

(24.01.2020 முதல் 23.09.2020 வரை)

தொழில் அதிக கவனம் செலுத்துவது நல்லது, அதிக வருமானமும், போட்டி பொறாமைகளால் அதிக பிறச்சனைகளும் தலை தூக்கும்.

வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.

நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப் பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று நல்ல முடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது

பாதிப்பு குறைய என்ன பரிகாரம்

சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடு மற்றும் பரிகார முறைகளையும் தெரிந்து கொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020

யாருக்கு நடக்கும் நடக்காது

************************************

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************