ராகு கேது பெயர்ச்சி 2019 ரிஷபம்

0
2773
ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி 2019 தேதி, ராகு கேது பெயர்ச்சி எப்போது, ராகு கேது பரிகாரம், குரு கேது பெயர்ச்சி 2019 ரிஷபம், ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் 2019, ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி, ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசி, ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி, ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020 ரிஷபம், ரிஷப ராசி கேது பெயர்ச்சி 2019 to 2020, ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி தோசம் நீங்க, ராகு கேது தோஷம் நீங்க, ராகு கேது 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 எளிய பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 ரிஷபம் பரிகாரம், ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி ரிஷபம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசி, 2019 to 2020 ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி, rishapam rasi, rishapam rasi ragu kethu peyarchi, rishapam rasi ragu kethu peyarchi 2019, rishapa rasi ragu kethu peyarchi 2019, ragu kethu peyarchi 2019 to 2020, ragu kethu peyarchi 2019 to 2020 rishapam, ragu kethu peyarchi 2019 to 2020 rishapa rasi, Taurus rahu ketu transit, Taurus rahu ketu transit 2019, Taurus rahu ketu transit 2019 to 2020, Taurus, Taurus horoscope 2019,

Contents

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் 2019

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உங்கள் சம சப்தம பார்வையால் குருபகவான் பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில், அதே வேளையில் அட்டமசனியின் பலனையும் அனுபவித்து கொண்டிருக்கும் சமயத்தில், இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் சாதகமற்ற பலனை தரும் இடங்களான 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன

ராகு இருப்பது 3ல் (கடகம்) – வரவிருப்பது 2ல் (மிதுனம்)

கேது இருப்பது 9ல் (மகரம்) – வரவிருப்பது 8ல் (தனுசு)

இரண்டாமிட ராகு

தற்போது ராகு மாற இருக்கும் மிதுன வீடு காற்று ராசி என்பதாலும், இரட்டைத்தன்மை ராசி என்பதாலும், ஆன்லைனில் வர்த்தகம் மற்றும் வேலை செய்வோரும், கடை வைத்து சம்பாதிக்கும், கடைக்கு தேவையான பொருட்கள் விநியாக துறையில் இருப்பவர்களும், வண்டி வாகனம் சம்பந்தபட்ட துறையில் இருப்போரும், இசைத்துறை கலைத்துறை கலைஞர்களும், ஒரே நேரத்தில் இரண்டு தொழில், இரண்டு வேலை செய்வோரும், சாதுர்யமான பேச்சை மூலதனமாய் வைத்து சம்பாதிப்போரும் இரண்டாம் பாவத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நன்மைகளை அனுபவிக்க உள்ளீர்கள்.

அஷ்டம (எட்டாமிட) கேது

கேதுபகவான் 8-மிடத்திற்கு மாறுவதால், ரிஷப ராசியினருக்கு எட்டாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான், ரிஷபத்திற்கு, எதிர் தன்மையுள்ள கிரகம் ஆகும்.

ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் பலன்கள்

3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டின் அமரும் ராகுவால் ரிஷப ராசிக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

எனவே அதுபோன்ற வேலை அமையவும்  வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும்.

தொழில், கடன்கள், வேலை

[wp_ad_camp_3]

ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகுபகவான் தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டாலே இந்த ராகு-கேது பெயர்ச்சி எந்த வித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.

எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.

இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.

தனவரவு

[wp_ad_camp_3]

அதே நேரத்தில் 8-ம் இடத்தில் சுபத்துவமாக அமரப் போகும் கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று வருவது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை முடித்து கொடுப்பதன் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.

எட்டாமிடம் சுபத்துவம் அடைவதால் அதன் நல்ல பலன்களான எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.

படிப்பு மற்றும் பெண்கள்

[wp_ad_camp_3]

கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும்.

பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது. பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும்.

குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

வேலை, தொழில், கடன்கள்,வெளிநாடு – சிறப்பு பலன்கள்

இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும்.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள்  வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது.

உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் ராகு கேதுப்பெயர்ச்சியால் இருக்கும்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

உடல்நலம் மற்றும் குடும்பம்

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் குருபலம் வருவதால் இனிமேல் நல்லபடியாக திருமணம் நடக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு.

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கான சிறப்பு பலன்கள்

(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால் எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி

ராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி வரை

(07.03.2019 முதல் 04.11.2019 வரை)

எந்தக் காரணத்தை முன்னிட்டும் வீட்டுப் பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம்.

இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது.

வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம்  இது.

ராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி பின்

(04.11.2019 முதல் 24.01.2020 வரை)

அஷ்டமசனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெற  இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடக்கும் இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும் காலமாகும்.

வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.

தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த சமயத்தில் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது. அதே சமயம் கடனும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் உருவாகும் காலம் இது

ராகு கேது பெயர்ச்சியில் – சனிபெயர்ச்சிக்கு பின்

(24.01.2020 முதல் 23.09.2020 வரை)

அஷ்டமசனியின் தாக்கத்தில் இருந்து முழுவதும் விடுதலை பெற்ற பின்பு, வாழ்க்கை மிகமுக்கிய திருப்புமுனையை சந்திக்கும் என்பதை நீங்கள் உணரும் தருணம் இது.

சனி பகவான் உங்களுக்கு பாக்கியாதிபதி மற்றும் தொழிலுக்கு அதிபதியும் அவரே. அவரின் இந்த பெயர்ச்சி காலம். உங்களுக்கு உண்மையில் மிக சிறந்த பொற்காலமாகும்.

பணம் சம்பாதிப்பதில் இந்த காலம் உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. வாகனவிஷயங்களில் செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம் வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது

பாதிப்பு குறைய என்ன பரிகாரம்

சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடு மற்றும் பரிகார முறைகளையும் தெரிந்து கொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது

************************************

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************