Contents
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் 2019
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும்வீரிய ஸ்தானத்தில்கேதுபகவானும் இருந்து வந்த நிலையில் மாற்றம் நிகழ போகிறது.
இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு எட்டாமிடத்திலும்(அஷ்டமராகுவாக), கேதுபகவான் இரண்டாமிடத்திலும் பெயர்ச்சியாகிறார்கள்
ராகு இருப்பது 9ல் (கடகம்) – வரவிருப்பது 8ல் (மிதுனம்)
கேது இருப்பது 3ல் (மகரம்) – வரவிருப்பது 2ல் (தனுசு)
அஷ்டம (எட்டாமிட)ராகு
பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாமிடத்தில்இருந்து வந்தராகு அஷ்டம ராகுவாக வருவது, நன்மையும் தீமையையும் கலந்த அமைப்பாகும்.
தீடீர் தனலாபத்தையும், தீடிர் அவமானத்தையும் தரும் கட்டாயத்தில் ராகு வந்து அமர்ந்துள்ளார் என்பதால், கேளிக்கையாக பேசிய சொற்களால்,தேவையில்லாத பிரச்சனைகளில் ராகு சிக்க வைப்பார் என்பதை மனதில் நிறுத்தி அதன்படி செயல்படுவது மிக்க சிறப்பே.
புதனின் வீட்டில் வந்தமரும், ராகு, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், கலகலவென நகரும்காலத்தில் அதிக கவனம் தேவைப்படும். எச்சரிக்கை.
இரண்டாமிடகேது
கேதுபகவான்2-மிடத்திற்கு மாறுவதால்,விருச்சிக ராசியினருக்குஇரண்டாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும்.
ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும்.
ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.மேலும் வாக்கு ஸ்தானத்தில் அமரும் கேதுவால், பேசி சம்பாதிக்கும் தொழில் மிக சிறப்பாக பலன் தரும் காலம் இது.
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம்ராசிக்கான பலன்கள்
பேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டம ராகு என்பதால்இந்த ராகுகேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல்விழிப்புடன் இருங்கள்.
பேராசை பெரு நட்டம்– கவனம்
இந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு பின் பதினெட்டு மாதங்களுக்குசூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிக வட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.இதன் மூலம் எட்டாமிடத்து ராகு நிச்சயம் ஏமாற்றங்களைத் தருவார்.
ஏனெனில் ராகுவந்துஅமரகூடிய எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும்இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்டலாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி ராகு மோசம் போகச் செய்வார்.
ஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது.
மேலும் லாட்டரி போன்றசூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால்லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுக்காமல்இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.
குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும்முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்றுஅதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிகவட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில்மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது.
எட்டாமிடம் ராகுவால் ஆக்கிரமிக்கப் படுவதால் சிலர் தேவையற்ற விஷயங்களில்மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள்.
தேவையற்றவர்களுக்குஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது.அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிடசெயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
வேலை, தொழில்
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும்இந்தப் பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது.
கடன்கள் கட்டுக்குள்இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம்தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.
அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப்பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம்.
சில நேரங்களில் சுவர்களுக்குகூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலைசெய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள்போன்ற விஷயங்களை தவிருங்கள்.
அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்குஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம்.
முறைகேடான வருமானங்கள்வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பைவிலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும்என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.
சிலருக்கு பயணம் சம்பந்தமானவேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும்.பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவதுகடினம்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்துமாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.
குடும்பம் மற்றும் பெண்கள்
உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம்.பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டுஅதன்படி நடந்து கொள்வது நல்லது.
எவரையும் நம்ப வேண்டாம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியதுஅவசியம். உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவுஎன்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரைஉங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள்மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்.
பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப்புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும்கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின்பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.
மௌனம் வெற்றி தரும்
பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு ஆரம்பத்தில்மந்தநிலை இருக்கும்.ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங்செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பேகாரியங்கள் நடக்கும்.
யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால்நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும்எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.
ஆனால் கேது பகவானின் அருள் பெற்று (விநாயகர் வழிபாடு) அதன் மூலம், மந்த நிலையை சிறப்பான நிலையாக மாற்றமுடியும். கேது பகவானின் காயத்ரி மந்திரம் ஜபிப்பதும் சிறப்பான பலன் தரும் என்பதை மறக்க வேண்டாம்
யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்கவேண்டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படிஇருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.
என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்குஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்கவேண்டியது அவசியம்.
பணபரிமாற்றம், கடன்கள்,வழக்குகள்
கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அனைத்திற்கும் வேலைசெய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும்இப்போது இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள்.
தற்போதுதீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது.தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.
குடும்பப் பிரச்னைகளும்நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது. எனவே எதிலும் பொறுமையைக்கடைப்பிடிப்பது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள்போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம்.போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.
அடிதடி சண்டை போன்றவைகளால்கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால்எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தனவரவில் எச்சரிக்கை
கூடுமானவரைநேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளைமீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.
மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள்.பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சிலருக்குமறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்லமுடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் ராகுப்பெயர்ச்சியால் இருக்கும். ஆனாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்கான சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள்என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும்.கேது சுப வலிமையுடன் இருப்பதால் உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள்இருக்கும். சிலருக்கு மிகையான ஆன்மிக நாட்டம், ஞானிகள் தரிசனம், இதுவரைசெல்லாத திருத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம், புதிய வாகன யோகம், எதிலும்லாபம், மூத்தசகோதர நன்மை போன்றவைகள் உண்டாகும். ஏதேனும் ஒரு வகையில்விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பாக்கெட்டில் இருந்து பணத்தைஎடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையானஅடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். குலதெய்வத்தின்அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடுசெய்யுங்கள்.
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
இன்னும் சில காலத்தில் ஏழரைச்சனி தாக்கத்தில் இருந்து வெளிவரவிருக்கும் வேளையில் இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும். குருபகவானும் வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள்மேலோங்கும்.
சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறைநீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும்பாக்கியம் கிடைக்கும்.கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர்புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.
சிலருக்கு அலைச்சல்களும்மந்தநிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும்வருமானமும் கண்டிப்பாக இருக்கும். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமானவழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமானதிருப்பங்கள் இருக்கும். கவனத்துடன் செயல்படாவிடில், கடன்கள் அதிகமாகும் காலகட்டம்.
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
ஏழரைச்சனி தாக்கத்திலிருந்துவெளிவரும் காலம் இது. கடந்த10 வருடங்கள் மேலாக மிகுந்த துயரத்தை அனுபவித்து வந்த நீங்கள், உங்களின் வெற்றிபாதையில் அடியெடுத்து வைக்கும் காலம் இது.
ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்துநல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.
எட்டாம் வீட்டின் நல்ல விஷயங்களான வெளிநாட்டுத் தொடர்பு, வேற்று நாட்டுக்குடிமகன் ஆகுதல், வெளிதேச வாசம், சயனசுகம், தாராளமாக செலவு செய்யும்அளவுக்கு வருமானம், அடிக்கடி பிரயாணம் போன்ற பலன்கள் உங்களுக்கு இப்போதுநடக்கும்.
ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிகம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.
ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்கான பலன்கள் 2019-2020
யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************